• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"செக்".. திமுகவை கதற விடும் தினகரன்.. மொத்த முஸ்லிம் ஓட்டையும்.. லட்டு போல அள்ள.. வேற லெவல் பிளான்

Google Oneindia Tamil News

சென்னை: ஓவைசி இந்த முறை தமிழகத்தில் களம் இறங்க போகிறார்.. இதனால் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  சென்னை: ஓரிரு நாளில் சென்னை வரும் ஓவைசி… தயாராகும் அமமுக தேர்தல் அறிக்கை!

  ஓவைசி - பொறுத்தவரை சமீபத்தில் இந்திய அரசியலில் முணுமுணுக்கப்பட்டு வரும் பெயர்.. நடந்து முடிந்த பீகார் தேர்தலாகட்டும், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலாகட்டும், இந்த தேர்தல்களில் ஒவைசி தவிர்க்க முடியாத நபராகிவிட்டார்.

  2015-ல் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இவர் போட்டியிட்டபோது, டெபாசிட் கூட கிடைக்கவில்லை.. இதற்கு பிறகுதான் வளர்ச்சி பெற்றார்.. படிப்படியாக முன்னேறினார்.. பீகார் தேர்தலில் மலைக்க வைத்தார்.. தன் மீதான கவனத்தையும் தேசிய அளவில் மொத்தமாக திருப்பி வைத்து விட்டார். ஒருசில மாதங்களுக்கு முன்புகூட ஓவைசி தமிழகத்திலும் போட்டியிடுவார் என்று செய்திகள் பரபரபத்தன..

  தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. அமமுக - ஓவைசி கட்சி கூட்டணி.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. அமமுக - ஓவைசி கட்சி கூட்டணி..

   கமல்

  கமல்

  ஒருகட்டத்தில்,சீமானுடன் ஒவைசி கை கோர்ப்பார் என்று சொல்லப்பட்டது.. பிறகு கமலுடன் ஒவைசி கூட்டணி வைப்பார் என்ற தகவல் கசிந்தது.. இதற்கு பிறகு தமிழக கட்சியின் மாநில நிர்வாகிகளோடு ஓவைசி ஆலோசனை நடத்தியதாகவும், 25 தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவது என்ற முடிவில் ஓவைசி இருப்பதாகவும், அதற்காக எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஒரு வியூகம் அமைப்பதற்காகவே ஓவைசி தமிழக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியதாகவும் கூடுதல் செய்திகளும் வெளிவந்தன.

   உதயநிதி

  உதயநிதி

  அதற்கு பிறகு அந்த பேச்சையே காணோம்.. மறுபடியும் திமுக தரப்பில் இதே பெயர் முணுமுணுக்கப்பட்டது.. இதை உச்சரித்தது உதயநிதி ஸ்டாலின்தான்.. ஓவைசியுடன் கூட்டணி என்றார்கள், பிறகு இல்லை என்று மறுப்பும் திமுக தரப்பில் வெளியானது.. திமுகவின் சிறுபான்மை பிரிவு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அதற்கு திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், திமுக தலைமை இம்முடிவை கைவிட்டது.

   சேப்பாக்கம்

  சேப்பாக்கம்

  ஆனால், உதயநிதி மட்டும் ஒவைசியுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. இதற்கு காரணம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தன்னை எதிர்த்து குஷ்பு போட்டியிட நேர்ந்தால், முஸ்லிம் வாக்குகளை அள்ள ஒவைசி உதவியாக இருக்கக்கூடும் என்பதே உதயநிதியின் கணக்காக இருந்தது. பிறகு இந்த பேச்சையும் அதற்கு பிறகு காணோம்.

   3 தொகுதிகள்

  3 தொகுதிகள்

  இன்று தேர்தல் தேதி குறிக்கப்பட்டுள்ள சூழலில், ஒவைசியின் பேச்சு மறுபடியும் அடிபடுகிறது.. இந்த முறை அமமுகவில் ஓவைசியுடன் கூட்டணி வைத்து 3 தொகுதிகளையும் பெற்றுள்ளார்.. இதுதான் திமுக, அதிமுக, தரப்பினருக்கு பெருத்த ஷாக்கை உண்டு பண்ணி வருகிறது.. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ஓவைசி, தனித்தே போட்டியிடலாம் என்று ஆரம்பத்தில் செய்திகள் வந்தன.. இப்போதும் இஸ்லாமிய வாக்குகளை குறி வைத்தே களம் இறங்குகிறார்.

   திமுக

  திமுக

  ஆனால், யாருடைய வாக்குகளை ஓவைசி பிரிப்பார்என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. அதற்கு காரணம், வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுக கூட்டணிக்கே சாதகமாக விழுந்து கொண்டிருக்கும் சூழலில், இப்போது அதற்கு பாதிப்பு ஏற்படும் என்றே தெரிகிறது. திமுகவின் முஸ்லிம் ஓட்டுக்களை பிரிக்கவே ஒவைசியுடன் தினகரன் கூட்டணி வைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். தேசிய அளவில் இஸ்லாமிய தலைவராக உருவாகி வரும் ஓவைசி, அமமுகவோடு கூட்டணி வைத்துள்ளதை அதிமுக ஆச்சரியத்துடன் பார்க்கிறது.. திமுகவோ திகைத்து பார்க்கிறது.

  சிறுபான்மையினர்

  சிறுபான்மையினர்

  இந்த முடிவை முன்பே எடுக்காமல் விட்டுவிட்டோமோ என்ற ஐயமும் எழுந்துள்ளது. சசிகலா இல்லாத சூழலில் தினகரனுக்கு எப்படியும் தென்மண்டல வாக்குகள் கிடைக்கும் என்றாலும், சிறுபான்மையினர் ஓட்டுக்களுக்கும் விழும் என்பதில் சந்தேகமில்லை.. தினகரன் + ஓவைசி என்ற புதுகூட்டணி திமுகவுக்கு தேர்தல் ரிசல்ட் வரை கலக்கத்தை தரும் என்பதிலும் சந்தேகமில்லை.. பார்ப்போம்..!

  English summary
  TTV Dinakarans Mass Plan against DMK and Ovaisi join hands with AMMK
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X