சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"திமுகதான் குறி".. என்ன சொல்ல வருகிறார் தினகரன்.. ஒருவேளை "அது"தான் காரணமா..?

டிடிவி தினகரனின் அமமுக தேர்தல் வேலைகளில் இறங்கி விட்டது

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமமுகவின் செயல்பாடுகள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளன... அதற்கேற்றவாறு பல்வேறு சாதகமான விஷயங்களும் அக்கட்சிக்கு நடந்து வருகின்றன.

இவ்வளவு நாள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எந்தவித சத்தமும் இல்லாமல் ஒதுங்கியபடியே இருந்தார். வெற்றிவேல் மறைவுக்கு பிறகுகூட, அமமுகவின் கூட்டம் அவ்வளவாக நடத்தப்படவில்லை.

திமுக, அதிமுகவும் வீடியோ காரன்பரஸ் மூலம் கூட்டங்களை நடத்தி வந்தும், தினகரன் அந்த அளவுக்கு பெரிய கூட்டங்களை நடத்தவில்லை. ஆனால், கள பணிகளில் மிக மும்முரமாக இறங்கி உள்ளதாக சொல்லப்பட்டது.

 விடுதலை

விடுதலை

இதற்கு பிறகுதான் சசிகலா விடுதலை பற்றின செய்திகள் வெளிவர தொடங்கியது.. இந்நிலையில், 2 விஷயங்கள் அமமுக கட்சி பற்றி றெக்கை கட்டி பறந்து வருகின்றன.. முதலாவதாக, குக்கர் சின்னம் இக்கட்சிக்கு மறுபடியும் கிடைத்துள்ளது.. இது எப்படி கிடைத்தது? கமலுக்கு டார்ச் லைட் தராமல், தினகரனுக்கு மட்டும் குக்கர் கிடைக்க என்ன காரணம் என்பது பற்றின தகவல் கசிந்து வருகிறது..

 வாக்குகள்

வாக்குகள்

கடந்த எம்பி தேர்தலில் அதிமுக எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை பெருவாரியாக அமமுக பெற்றிருந்தது. அதனால் தினகரன் கேட்ட சின்னத்தை அப்போதும் தந்தால், அவர் திமுகவுக்கு செல்லும் வாக்குகள், அதிமுக எதிர்ப்பு வாக்குகள், போன்றவற்றை பிரித்துவிடுவார் என்று பாஜக கணக்கு போட்டதாகவும், அதனாலேயே குக்கர் மறுபடியும் கைக்கு வந்து சேர்ந்தது என்கிறார்கள்.

 அதிமுக

அதிமுக

அதேபோல, இன்னொரு விஷயமும் கூறப்படுகிறது.. திமுகவை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள், ஆனால், அதிமுகவை அவ்வளவாக விமர்சிக்க வேண்டாம் என்று தன்னுடைய நிர்வாகிகளை தினகரன் வாய்மொழியாக கேட்டுக் கொண்டுள்ளாராம்.. இந்த 4 வருஷத்தில், எடப்பாடி அரசு என்று ஆளும் தரப்பை காட்டமாக விமர்சித்து ட்வீட் போட்டு வருபவர் தினகரன்.. எந்த குறைகளையும் துணிச்சலாக சுட்டிக்காட்டி வருபவரும்கூட.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

அதேசமயம், அதிமுக மேலிடம், தினகரனை கடிந்து இந்த 4 வருடங்களில் பேசியது இல்லை... ஆனால், "அதிமுகவை விமர்சிக்க வேண்டாம், திமுகதான் நமக்கு எதிரி" என்று நிர்வாகிகளிடம் தினகரன் தற்போது தெரிவித்திருப்பதுதான் காரணம் புரியவில்லை.. ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், சசிகலா வரும் சமயத்தில் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. மேலும், அமமுக, அதிமுக இணைந்தால்தான் திமுகவை சமாளிக்க முடியும் என்பதால், இந்த அணுகுமுறையா என்றும் தெரியவில்லை.. எப்படியோ, இந்த இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்தால், ரத்தத்தின் ரத்தங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க போகிறது!

English summary
TTV Dinakarans TN Assembly election stategy 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X