சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்ரீபெரும்புதூரில் டிவி செய்தியாளர் வெட்டிக்கொலை - பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் உடனே அந்த குடும்பத்துக்கு 25 லட்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் ரவுடிக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விடாமல் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் உடனே அந்த குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "செய்தியை வெளியிட்ட தமிழன் டிவி நிருபர் மோசஸ் இரவு 10.30 மணிக்கு வீட்டு வாசலில் போன் பேசி கொண்டிருந்த போது, இரண்டு பேர் பயங்கர ஆயுதத்தோடு தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரின் தந்தை வெளியே வருவதை கண்டு அரிவாளுடன் மர்ம நபர்கள் தப்பி ஒடி விட்டார்கள்.

TV journalist murdered in Sriperumbudur - Press Association condemns

தலையில் கையில் பலத்த வெட்டுடன் குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்த பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கடந்த வாரம் அவர் ஏரியாவில் நடக்கும் கஞ்சா வியாபரத்தையும் சமூக அவலத்தையும் பற்றி செய்தி வெயிட்டார். அதன் பிறகு அவருக்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் வந்துள்ளது. அவர் தந்தை அருகில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்படி எடுத்திருந்தால் என் மகனை இழந்திருக்க மாட்டேன் என்று கதறி அழுது கொண்டு அவரின் தந்தை தகவல் தெரிவித்தார். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காதான் ஒரு உயிர் பலியாகி விட்டது என்று குடும்பத்தாரின் புகார் இச்சம்பம் இதுவரை தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திக்காத சம்பவம் தமிழக காவல் துறை இயக்குநர் தலையிட்டு குற்றவாளிகள் யாராகயிருந்தாலும் தப்ப விடாமல் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் முதல்முறையாக.. மேலே விமான ஓடுதளம்.. கீழே 4 வழிச்சாலை.. சூப்பராக மாறப்போகும் மதுரை தமிழகத்தில் முதல்முறையாக.. மேலே விமான ஓடுதளம்.. கீழே 4 வழிச்சாலை.. சூப்பராக மாறப்போகும் மதுரை

தமிழக முதல்வர் அவர்கள் உடனே அந்த குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் மிக பெரிய ஜனநாயக படுகொலை மற்ற மாநிலத்தில் உள்ளது போலே பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும். உயிரிழந்த குடும்பத்தில் உள்ளவர்க்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எங்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்காவிட்டால் அனைத்து பத்திரிக்கையாளர்களும் இணைந்து தமிழக முழுவதும் ஆர்பாட்டம் நடத்துவோம் " என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே செய்தியாளர் மோசஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரவுடி நவமணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

English summary
The murder of Tamil TV journalist Rowdees near Sriperumbudur has come as a shock. The Working Journalists Association has demanded that the Tamil Nadu Chief Minister immediately provide 25 lakh relief to the family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X