சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட... வெத்தலைல மை போட்டு பார்க்கறது சோழி உருட்டறது பொய்யின்னு டிவியிலேயே சொல்லிட்டாங்களேபா!

Google Oneindia Tamil News

சென்னை: அருள் வந்துச்சு... வெத்தலையில மை போட்டு பார்த்தேன்னு டிவியிலதான் சீன் வரும்... மெய்யோ பொய்யோ கடவுளுக்கே வெளிச்சம்.

சன் டிவியின் மகாலட்சுமி சீரியலில் போலீஸ் ஒரு சாமியாரை அரெஸ்ட் பண்ண வராங்க. மக்கள் அவரு நல்ல சாமியாருங்க... எதுக்கு அவரை அரெஸ்ட் பண்றீங்கன்னு கொந்தளிக்கறாங்க.

இவர் போலி சாமியாருங்க... இப்படித்தான் உங்களை எல்லாம் ஏமாத்திகிட்டு இருக்கான்னு சாமியாரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிக்கிட்டு போறாங்க.

தொலைக்காட்சிகளில்

தொலைக்காட்சிகளில்

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு சொல்ற மாதிரி, இந்த சம்பவம், டிவி சீரியல் என்றாலும் கொஞ்சம் சந்தோஷப்படவே வைத்திருக்கிறது. அருள் வருது...சாமி சொல்லுது, மை காமிக்குதுன்னு சீரியல்களில் காமிக்கற நேரத்துல இந்த காட்சி சிந்திக்க வைக்குது.

வாதம்

வாதம்

நல்லவராச்சே எதுக்குங்க அரெஸ்ட் பண்றீங்கன்னு மக்கள் கேட்கறாங்க. போன மாசம் எங்க வீட்ல திருட்டு போன நகையை யார் எடுத்து இருப்பாங்கன்னு கூட சொன்னாருங்கன்னு ஒரு அம்மா சொல்லும்.

விளக்கம்

விளக்கம்

ஒரே நாளில் சொல்லிட்டாரான்னு போலீஸ் கேட்க, இல்லை மறு நாள் வாங்கன்னு சொல்லித்தாங்க சொன்னார்னு அந்த அம்மா சொல்லும். அதுக்குள்ளே இவன் உங்க குடும்பம், உங்களுக்கு யார் பகைன்னு தெரிஞ்சுக்கிட்டு மறுநாள் இவங்கதான் எடுத்திருப்பாங்கன்னு சொல்லுவான். நீங்களும் அதை நம்பிருவீங்க.

தண்ணி

தண்ணி

ஆமாம் நம்ம ஊர் பேங்க்ல கொள்ளை போயிருச்சே அது யார்னு சொல்றியான்னு போலீஸ் சாமியாரைக் கேட்க, இன்னிக்கு விட்ருங்க, நாளைக்கு வாங்க சொல்றேன்னு சாமியார் சொல்ல, பார்த்தீங்களா... போலீசுக்கே தண்ணி காட்றான்.இவனுங்க பொழப்பே இப்படித்தான்...நடடா ஸ்டேஷனுக்குன்னு கைது பண்ணி அழைச்சுக்கிட்டு போயிடுவாங்க.

இதுமாதிரி அப்பப்போ நல்ல காட்சிகள் வச்சா மக்கள் ஏமாறமா இருப்பாங்க இல்லே...

திரிஷா கூட எப்படியாவது ஒரு தடவையாவது.. மெய் சிலிர்த்துக் கூறும் அருண் விஜய்திரிஷா கூட எப்படியாவது ஒரு தடவையாவது.. மெய் சிலிர்த்துக் கூறும் அருண் விஜய்

English summary
Sun TV's Mahalakshmi serial is exposing the fake saints in an episode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X