சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. ஆண்டிப்பட்டிக்குப் போற கடைசி பஸ்ல கூட இம்புட்டு கூட்டம் இருக்காது!

Google Oneindia Tamil News

சென்னை: வட இந்திய மீடியாக்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.. டிபேட் என்றாலும் சரி, வேறு மேட்டர் என்றாலும் சரி கலக்கி விடுகிறார்கள். அதிலும் அர்னாப் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் சவுண்டு ஜவ்வைக் கிழித்தெடுக்கும்.

நேற்று எக்ஸிட் போல் திருவிழாவை திறம்பட நடத்தி முடித்தன வட இந்திய ஊடகங்கள். அதில் ரிபப்ளிக் டிவியும் ஒன்று. அர்னாப்தான் நடு நாயகமாக இருந்து கலக்கினார். ஸ்கிரீனைப் பார்த்தால்.. அடேங்கப்பா.. ஆண்டிப்பட்டிக்குப் போற கடைசி பஸ்ஸைப் பிடிக்க ஓடி வந்த கூட்டம் போல அப்படி ஒரு ஜனக் கூட்டம்..!

TV viewers stumbled on bunch of debaters in Republic TV

அத்தனை பேரும் டிபேட்டில் பங்கேற்க வந்த கருத்துக் கோர்வையாளர்கள் (வார்த்தை சரிதானே!). அதாவது எக்ஸிட் போல் குறித்து தங்களது கருத்துக்களைக் கொட்டி வைக்க வந்த அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள்.. பல் துறையினர்.

ஒரு ஐந்து பேரைக் கூப்பிடுவார்கள், அல்லது 6, 7 பேரை கூப்பிடுவார்கள். ஆனால் இந்த ரிபப்ளிக் டிவி டிபேட்டுக்கு வந்தவங்க எத்தனை பேர் தெரியுமா 18 பேராம். நீநீநீநீநீநீநீநீளமா ஒரு பெஞ்ச்சைப் போட்டு அத்தனை பேரையும் உட்கார வைத்திருந்தனர். பார்க்கவே செம ஜாலியாக இருந்தது.

டிபேட் நடத்துவதிலும் பிரமாண்டம் காட்ட நினைத்த ரிபப்ளிக் டிவியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அதுக்காக இப்படியா.. 2 பேர், 3 பேர் கூட்டமா பேசினாலே ஸ்கிரீன் கிழியும்.. இதில் 18 பேரும் சேர்ந்து கருத்தை வீசினால்.. அடேயப்பா.. இப்படியாக 18 பேரும் சிறப்பாக டிபேட்டை முடித்துக் கொண்டு அவரவர் இல்லம் திரும்பினர்.

English summary
Nearly 18 analysts participated in a TV debate in Republic TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X