• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா".. கஸ்தூரி போட்ட போடு

|

சென்னை: கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. சசிகலா வருகையின் பரபரப்புக்கு நடுவில் கஸ்தூரியின் இந்த ட்வீட்தான் சோஷியல் மீடியாவில் ஏடாகூடமாக வைரலாகி வருகிறது.. நல்ல நேரம் பார்த்து கஸ்தூரி இப்படி ஒரு ட்வீட் பதிவிட்டாரே என்று நாலாபக்கம் இருந்தும் அவருக்கு சபாஷ் கிளம்பி உள்ளது.
7 நாள் ரெஸ்ட்டுக்கு பிறகு சசிகலா இன்று சென்னைக்கு வருகிறார்.. ஆனால், அவர் இன்று வருவதற்கு முன்னதாகவே, ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டு விட்டது.

சசிகலாவுக்கு அரசியல் ரீதியாக எந்தவித ஆதாயமும் கிடைத்து விடக் கூடாது என்னும் நோக்கில் ஜெயலலிதாவின் நினைவிடம், வேதா இல்லம், சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகம் போன்றவற்றை எல்லாம் பூட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது தமிழக அரசு.

பரபரப்பு

பரபரப்பு

அதனால் இன்றைய நாள் முழுவதுமே தமிழகம் பரபரப்பாக இருக்கிறது.. சசிகலா சென்னையில் கால் வைத்தவுடன் என்ன செய்ய போகிறார்? பீச்சுக்கு போவாரா? கட்சிக்கு ஆபீசுக்கு போவாரா? அல்லது தி.நகருக்கு போவாரா? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.. எனவே காலையில் இருந்தே மொத்த மீடியாவும் சசிகலாவைதான் ஃபோகஸ் செய்து வருகின்றன.

சின்னம்மா

இப்படிப்பட்ட சூழலில் யாருமே எதிர்பாராத நேரத்தில் கஸ்தூரி ஒரு விஷயத்தை சொல்லி உள்ளார்.. தன்னுடைய ட்வீட்டில், "நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்குவுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!" என்று பதிவிட்டுள்ளார்.

அரசியல்

அரசியல்

இந்த ட்வீட் மூலம் கஸ்தூரி 2 விஷயங்களை மறைமுகமாக இல்லாமல், வழக்கம்போல நேரடியாகவே இடித்துரைத்து ட்வீட் போட்டுள்ளார்.. உண்மையில் இன்னும் தமிழ்நாட்டில் தொற்று குறையவில்லை.. அரசியல் பரபரப்புகளுக்கிடையே சோஷியல் டிஸ்டன்ஸ் என்ற பேச்சே மருந்துக்குகூட எங்குமே காணப்படவில்லை.. சசிகலா இந்த ஒருவாரம் ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது அவரை வரவேற்க, வெளியே திரண்டிருந்த கூட்டத்தில் ஒருத்தரும் மாஸ்க் போடவில்லை.. நெருக்கி நெருக்கி ஆதரவாளர்கள் நின்று கொண்டிருந்த வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை தந்தன.

வருகை

வருகை

இன்று, சசிகலாவின் வருகையிலும் அதுதான் நடந்தது.. வழிநெடுகிலும் திரண்டு வரவேற்க தெரிந்த ஆதரவாளர்களுக்கு மாஸ்க் என்ற விஷயத்தை பற்றி நினைப்பே இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.. அதைதான் கஸ்தூரி கேட்டுள்ளார்.. மேலும், சசிகலா வருகையையொட்டி நினைவிடம், அதிமுக அலுவலகம் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், பிரச்சார கூட்டமும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.. அது விவாதங்களையும் கிளப்பி வரும் நிலையில்தான், டாஸ்மாக்கையும் மூடினால் நல்லா இருக்குமே என்ற தொனியில், "சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!" என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

மேடம்

மேடம்

ஆனால், கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து, தங்கள் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.. "ம்ஹூம் மேடம்.. அது மட்டும் நடக்கவே நடக்காது... வருமானமே டாஸ்மாக் மூலம் தான் வந்து கொண்டிருக்கிறது.. அதனால் ஸ்மால் மம்மி அந்த பக்கம் காரை விட மாட்டாங்க..." என்றும், "மேடம், அவங்க இறைக்குற காசெல்லாம் டாஸ்மாக்லதான் நிறைஞ்சிட்டு இருக்கு.... கிருஷ்ணகிரி....வேலூர்.. சென்னை ஹைவேஸ் ஒட்டின டாஸ்மாக் சேல்ஸ் இன்னைக்கு அல்டிமேட்" என்றும் கஸ்தூரிக்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

English summary
Kasturi tweet about Sasikalas Chennai arrival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X