சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரட்டை புயல்.. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உருவாகும் 2 புயல்கள்.. இந்திய கடற்பரப்பில் வானிலை அதிசயம்!

Google Oneindia Tamil News

சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பெரிய புயல்கள் உருவாக உள்ளது. இதில் ஒரு புயலான நிவர் புயல் தமிழகத்தை தாக்க உள்ளது.

Recommended Video

    #BREAKING நிவர் புயல் தமிழகத்தை கடக்கும்போது 120 கிமீ வேகத்தில் காற்று வீசும்..!

    தமிழகத்தை வரும் 25ம் தேதி நிவர் புயல் தாக்க உள்ளது. வங்கக்கடலில் தற்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

    இது வேகமாக வலிமை அடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

     புயல்

    புயல்

    24 மணி நேரத்தில் இது புயலாக மாறும். நிவர் என்று இந்த புயலுக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் காரைக்கால் - மஹாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. மணிக்கு 115 கிமீக்கும் அதிகமான வேகத்தில் இதனால் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

     ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சென்னையில் அதிக அளவில் மழை பெய்யலாம். ஒரு பக்கம் நிவர் புயல் தமிழகத்தை தாக்க உள்ள நிலையில் இன்னொரு பக்கம் காட்டி என்ற புயலும் அரபிக்கடலில் உருவாகி உள்ளது.

    கதி புயல்

    கதி புயல்

    அரபிக்கடலில் உருவாக்கி இருக்கும் இந்த கதி புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இன்று அதிகாலை இந்த புயல் தீவிரம் அடைந்தது. ஆனால் இந்த புயல் மேற்கு நோக்கி நகர்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இருக்கும் இந்த கதி புயல் வேகமாக மேற்கு நோக்கி செல்கிறது.

    ஆபத்து இல்லை

    ஆபத்து இல்லை

    இதனால் இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு ஆபத்து ஏற்படாது. இந்த புயல் தற்போது சோமாலியா கடல் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. சோமாலியா கடல் பகுதியில் இந்த தீவிர புயலால் இப்போதே தீவிர காற்று வீசி வருகிறது. வடக்கு சோமாலியா அருகே இந்த காட்டி புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்புள்ளது.

    அதிசயம்

    அதிசயம்

    இந்த காட்டி புயல் காரணமாக தற்போது ஒரே நேரத்தில் இந்தியகடல் பகுதியில் இரண்டு புயல்கள் நிலைகொண்டு உள்ளது. ஒன்று தமிழகத்தை நோக்கியும், இன்னொன்று தமிழகத்தை விட்டு விலகியும் செல்கிறது. நிவர் புயலால் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Twin cyclone: Two storms formed in Indian ocean, One will hit TN
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X