சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவின் சில பகுதிகள் உட்பட.. உலகின் பல பகுதிகளில் முடங்கிய டுவிட்டர்

Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைத்தளமான ட்விட்டர் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

57% ஆண்ட்ராய்டு பயனாளர்கள், 15% ஐஓஎஸ் பயனாளர்கள் 27% வெப்சைட் பயனாளர்கள், தாங்கள் இவ்வாறு பிரச்சினையை சந்தித்ததாக கூறியுள்ளனர். பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியாவின் சில பகுதிகள், ஐரோப்பா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ட்விட்டர் முடங்கி இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Twitter down for many countries

இதையடுத்து, #TwitterDown என்ற பெயரில் ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. பல நாடுகளிலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், டுவிட்டர் ஒரு முக்கியமான பொழுது போக்கு தளமாக இருந்தது. ஆனால், அதில் பிரச்சினை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

புதன்கிழமை, ட்விட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தனது பொது நிதியின் மூலம் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக தனது தனிப்பட்ட பணத்திலிருந்து, 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7,600 கோடி) டொனேஷன் செய்தார்.

அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் இது 28 சதவீதமாகும்.

English summary
Many users across several countries have reported that the microblogging website wasn't working.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X