சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு சில நிமிடங்கள் முடங்கிய ட்விட்டர்... உடனடியாக சரிசெய்யப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு..!

Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ஒரு சில நிமிடங்கள் திடீரென முடங்கியதால் அதன் மில்லியன் கணக்காண பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்ணியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ட்விட்டர் நிறுவனமானது சமூக வலைதளப் பயன்பாடுகளில் முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தை உலகம் முழுவதும் பல நூறு மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள், நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பட்டோரும் தாங்கள் கூற நினைக்கும் கருத்தை ட்விட்டர் மூலம் உலகிற்கு பகிர்ந்து வருகின்றனர்.

Twitter inactive for a few minutes in world wide

இரண்டு நாட்கள் கழித்து சென்று சேரும் தபால் கடிதத்திற்கு மத்தியில் இரண்டே விநாடிகளில் உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் ட்விட்டர் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இதன் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Twitter inactive for a few minutes in world wide

இந்நிலையில் இன்று மாலை 7.30 மணியளவில் ஓரிரு நிமிடங்கள் உலகம் முழுவதும் ட்விட்டர் பக்கம் திடீரென முடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த முடக்கத்தை அடுத்த சில விநாடிகளில் சீரமைத்துக் கொடுத்தது ட்விட்டர் நிறுவனம். இதனால் முடங்கிய ட்விட்டர் பக்கங்கள் மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.

"அண்ணா என்னாச்சு".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா!

இதனிடையே ட்விட்டர் முடங்கியதை பற்றி முகநூல் பக்கங்களில் நெட்டிசன்கள் அது தொடர்பான காட்சி சித்திரங்களை உடனடியாக பகிரத் தொடங்கினர்.

English summary
Twitter inactive for a few minutes in world wide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X