சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்முறை வேண்டாம்னுதானே ரஜினி சொன்னார்.. ரசிகர்கள் சப்போர்ட்.. டிரெண்டாகும் #IStandWithRajinikanth

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் இருந்தாலும் மறுபக்கம் ஆதரவும் அதிகமாக உள்ளது ரஜினிக்கு ஆதரவாக #IStandWithRajinikanth என்ற பெயரில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருவது குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்த், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

இவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் ஒருபக்கம் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பலரும் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு அவற்றை#IStandWithRajinikanth என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

போர் வந்திருச்சாம் வாங்க! ரஜினிக்கு எதிராக டுவிட்டர் ரியாக்சன்கள்.. #ShameOnYouSanghiRajini போர் வந்திருச்சாம் வாங்க! ரஜினிக்கு எதிராக டுவிட்டர் ரியாக்சன்கள்.. #ShameOnYouSanghiRajini

வேதனை அளிக்கிறது

ரஜினி வன்முறை தீர்வு அல்ல என்று தானே சொல்கிறார். அவரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

வன்முறை வேண்டாம்

ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை, யாரையும் தவறாக பேசியிருக்கிறாரா, குடியுரிமை சட்டத்தை ஆதரித்திருக்கிறாரா? அரசியலால் ஏற்படும் வன்முறை வேண்டாம் என்றுதானே சொல்லியிருக்கிறார் என்று சரிகா ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

குரல் கொடுத்தது ரஜினி

தலைவர் ரஜினி ஒரு போதும் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தது இல்லை. இலங்கை தமிழர்களுக்காக முதல்முறையாக குரல் கொடுத்தது ரஜினி தான். வன்முறை எதற்கும் தீர்வல்ல என்று தானே சொன்னார். இப்போதைய வன்முறைகள் நாட்டில் இருக்க வேண்டுமா? என்று ரஜினிகாந்த் பேன்ஸ் கிளப் கருத்து தெரிவித்துள்ளது.

பலவீனத்திற்காக வன்முறை

காந்தியின் புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் "அவர்களின் மனதை மாற்ற விரும்புகிறேன், ஆனால் பலவீனத்திற்காக அவர்களை வன்முறையால் கொல்ல விரும்பவில்லை, நாம் அனைவரும் அமைதியாக மனதை வைத்திருக்க வேண்டும்" ஒரு மேற்கோளையும் குறிப்பிட்டு மார்க் ஆண்டனி என்பவர் பதிவிட்டுள்ளார்..

எதிர்ப்பு ஏன்

எதிர் முகாமில் உள்ள ஒவ்வொருவரும் ரஜினியின் ட்வீட்டுக்கு தீவிரமான எதிர்ப்பை காட்டுவதை பார்க்கும் போது அரசியலில் தலைவரைப் பற்றி அவர்கள் எவ்வளவு பயந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று ஸ்ரீதர் என்பவர் பதிவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்ட பின்னணி என்று ஊடகங்களில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உண்மை ஒரு நாள் வெல்லும் என்று ரஜினிக்கு ஆதரவாக ஒருவர் கருத்து பதவிட்டுள்ளார்.

English summary
twitter trending support rajini over his comments OF citizenship ammendment act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X