சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை அம்மா உணவகத்தில் நடந்த இரண்டு மாற்றம் .. சென்னை மாநகராட்சி விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னையில் ஒரு சில மண்டலங்களில் உள்ள சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அம்மா உணவகத்தில் உறுப்பினர்கள் சமசீர் விகிதத்தில் நியமிக்கவே மாற்றப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை மாநகராட்சி விரிவான விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 400 அம்மா உணவகங்களும், பொது மருத்துவமனைகளில் 7 அம்மா உணவகங்களும் என 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு 4 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு தற்போது 403 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.. காணாமல் போன மீனவர்.. என்ன நடந்தது? வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.. காணாமல் போன மீனவர்.. என்ன நடந்தது?

403 அம்மா உணவகங்கள்

403 அம்மா உணவகங்கள்


இந்த 403 அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் இட்லி மற்றும் பொங்கல், மதிய வேளையில் சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதமும், இரவு வேளையில் சப்பாத்தியும் தரமாக தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தொடர்ந்து மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அரிசி கோதுமை

அரிசி கோதுமை

பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நிதி நெருக்கடி நிலையிலும் இந்த அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகவும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் கூட்டுறவு பண்டக சாலைகளிலிருந்தும் பெறப்பட்டு வருகிறது.

இயந்திர கோளாறு

இயந்திர கோளாறு

இவ்வாறு பெறப்படும் பொருட்களில் கோதுமை தனியார் ஆலைகளில் மாவாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக ஒரு சில மண்டலங்களில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

தக்காளி சதம்

தக்காளி சதம்

இதுபோன்று சப்பாத்தி வழங்குவதில் தடங்கல் ஏற்படுகின்ற நேரங்களில் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கும் நிகழ்வானது அவ்வப்போது நடைபெறுவது இயல்பான ஒன்றே. எடுத்துக்காட்டாக 2020 ஆம் ஆண்டு கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்பொழுது சப்பாத்தி இரவு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான சமையல் பொருட்களும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

மேலும் 403 அம்மா உணவகங்களில் பணியில் உள்ள எந்த ஒரு சுய உதவி குழு உறுப்பினரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை. ஒரு அம்மா உணவகத்திற்கு விற்பனையை கருத்தில்கொண்டு அதிகபட்சமாக 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பல அம்மா உணவகங்களில் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் மற்றும் பல அம்மா உணவகங்களில் பற்றாக்குறையுடனும் உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து அம்மா உணவகங்களிலும் விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக இருக்கும் வகையில் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai Corporation has given a detailed explanation on the controversy over the provision of tomato rice in response to sapathi at Amma unavagam in Chennai Corporation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X