சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்று பஸ் , கேப், ஆட்டோ இல்லாமா அவதிப்பட்ட சென்னை மக்கள்... இந்த 2 விஷயம் தான் காரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மேற்கூரையில் அமர்ந்தும் பயணம்.. பீகார் நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழகம்- வீடியோ

    சென்னை: நேற்று சென்னையில் போதிய அளவு பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று நேற்று பல பேருந்துகள் மொபசலாக நீண்ட தூர பயணத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

    தேர்தல் நாளான நேற்று சென்னை நகரில் எம்டிசி பேருந்துக்ள் சுத்தமாக இல்லை. இதேபோல் ஆட்டோ, கால் டாக்ஸி என எந்த சேவையும் பெரிதாக இல்லை இதனால் சென்னை நகரில் மக்கள் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.

    பப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்! பப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்!

    2 காரணங்கள்

    2 காரணங்கள்

    சென்னையில் பொதுவாக 3100 எம்டிசி பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் அதே நேரம் பொது விடுமுறை நாட்களில் 70 முதல் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் நேற்று அந்த அளவுக்கு கூட இயக்கப்படவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

    திருப்பிவிடப்பட்டன

    திருப்பிவிடப்பட்டன

    முதல் காரணம், 200க்கும் மேற்பட்ட எம்டிசி பேருந்துகள் மொபசல் பேருந்துகள் சென்னையை ஒட்டிய, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு கடந்த புதன்கிழமை இரவு இயக்கப்பட்டன.

    ஓட்டுபோட சென்றார்கள்

    ஓட்டுபோட சென்றார்கள்

    இரண்டாவது காரணம், சென்னை மாநகர அரசு பேருந்து ஊழியர்கள் பலர் ஓட்டு போடும் ஜனநாயக கடமைக்காக நேற்று வேலைக்கு வரவில்லை. அவர்கள் வாக்களிக்க சென்றுவிட்டனர்.

    கால்டாக்ஸியும் இல்லை

    கால்டாக்ஸியும் இல்லை

    இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் போதிய பேருந்துகள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட நேர்ந்தது. இதுஒரு புறம் எனில் ஆட்டோ ரிக்ஸா, கால் டாக்ஸிகளும் நேற்று சென்னையில் பெரிய அளவில் இயங்கவில்லை. இதன்காரணாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    English summary
    lok sabha elections 2019: Two of the reasons, why less buses in Chennai on polling day
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X