சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'சர்கார்' ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு சபாஷ்.. தமிழக தேர்தல் களத்தில் முதல் புரட்சி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Director A.R.Murugadoss: லோக்சபா தேர்தல் விஷயத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேராசை- வீடியோ

    சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த, சர்கார் திரைப்படத்தில், கள்ள ஓட்டுக்கு எதிராக போராடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான 49- பி சட்டப்பிரிவு தொடர்பாக விளக்கம் இடம் பெற்றிருக்கும்.

    இந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இதேபோன்ற சட்டப் பிரிவை பயன்படுத்தி இரு வாக்காளர்கள் பலன் பெற்றுள்ளார்கள். இதற்காக வாக்காளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவர் டீமுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

    சர்கார் திரைப்படம் பார்க்காதவர்கள் சொற்பமே. எனவே 49- பி சட்டப்பிரிவு தொடர்பான காட்சிகளை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

    ஓட்டு போட போன கர்ப்பிணி நீலாவதி.. ஓட்டும் போட்டாச்சு.. அப்பறம் என்ன ஆச்சு?ஓட்டு போட போன கர்ப்பிணி நீலாவதி.. ஓட்டும் போட்டாச்சு.. அப்பறம் என்ன ஆச்சு?

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    இந்த திரைப்படம் வெளியான பிறகு, வாக்காளர்களிடம், 49- பி சட்டப்பிரிவு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே, அதிகாரிகளிடம் தங்கள் வாக்குகளை போராடி பெற்று அளிக்க தொடங்கியுள்ளனர், வாக்காளர்கள். நெல்லை மாவட்டம் பணகுடியில், வாக்குசாவடி எண் 48ல் மணிகண்டன் என்ற வாக்காளரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டுச் சென்றுவிட்டார்.

    இருவர்

    இருவர்

    இதையடுத்து, மணிகண்டன், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அப்போது 49- பி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன்பிறகு, மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு ஏற்பாட்டின்பேரில், மணிகண்டன் வாக்களித்தார். இதேபோல பூந்தமல்லியில் ஒரு பெண்மணியும் 49-பி சட்டத்தை பயன்படுத்தி ஓட்டுப் போட்டுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம்

    கன்னியாகுமரி மாவட்டம்

    ஆனால், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு உள்பட்ட மீனவ கிராமங்களில் ஏராளமானோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதில் சஜின் என்பவர் ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டது. அவர் கேட்டுப் பார்த்தும், 49-பி பிரிவில் வாக்களிக்க அவகாசம் செய்து தரப்படவில்லை.

    கூடுதல் விழிப்புணர்வு அவசியம்

    கூடுதல் விழிப்புணர்வு அவசியம்

    49- பி தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால்தான், அதிகாரிகள் இதை எள்ளளுடன் கடந்து செல்லும் சூழல் வராது. அதன்பிறகு, கள்ள ஓட்டு பிரச்சினைக்கு முடிவு கட்ட வாய்ப்பு ஏற்படும்.

    English summary
    Two voters in Tamilnadu used 49-B for caste their vote, after getting inspired by Sarkar film.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X