• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பாலின சிறுபான்மையினர் "பெருமித மாதம்.."சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் கொடியேற்றி வைத்த துணை தூதர்

Google Oneindia Tamil News

சென்னை ஜூன் 3: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலக வளாகத்தில், அமெரிக்க துணைத்தூதர் புதன் கிழமை அன்று ஓரின சேர்க்கையாளர்கள், இருபாலின விரும்பிகள், திருநங்கையர், உள்ளிட்ட பாலின சிறுபான்மையினர் (LGBTQI+) "பெருமை மாதத்தினை" (Pride Month) துவக்கி வைக்கும் விதமாக வானவில் "பெருமை கொடியை" ஏற்றி வைத்தார். ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை இந்தக் கொடி பறக்க விடப்படும்.

U.S. Consulate General Chennai Unfurls Rainbow Pride Flag to Commemorate Pride Month

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின், இது பற்றிக் கூறுகையில், "அமெரிக்கா, பாலின சிறுபான்மையினரது மனித உரிமைகளை மதிக்கிறது. பாலின சிறுபான்மையினர் சட்ட ரீதியிலான சுதந்திரம், வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு, அடிப்படை மனித உரிமைகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றுக்காக செயல்பட்டு வருகிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், இந்தியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகம், மற்றும் அமெரிக்க மக்கள் அனைவரும் உலகெங்குமும் உள்ள பாலின சிறுபான்மையினருக்குத் துணை நிற்பார்கள். உலகெங்கும் வசிக்கும் அவர்களின் உரிமைகளை மதித்து, ஆதரிப்பதில் அமெரிக்கா ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்தப் பெருமையில் இணைந்து எங்களோடு சேர்ந்து நிற்க வாருங்கள்!" என்று அழைப்பு விடுத்தார்.

"பெருமை மாதக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம், அமெரிக்கன் ஃபில்ம் ஷோகேஸ் என்ற அமைப்புடன் இணைந்து, மாணவர்கள், திரைப்படத் துறையினர், சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பாலின சிறுபான்மையினர் விஷயங்களில் ஆர்வமுள்ளவர்களுக்காக "ஷேர்" என்ற ஆவணப்படத்தை மெய்நிகர் திரையீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தாக்கம் ஏற்படுத்தும் ஆசிய அமெரிக்க இளைஞன் ஒருவன், பாரம்பரியத்தில் ஊறிய தன் குடும்பத்தினரிடம், தன்னுடைய ஓரினச் சேர்க்கை அடையாளத்தை வெளிப்படுத்தும் போராட்டத்தை சொல்கிறது. ஆவணப் பட திரையீட்டினை அடுத்து நடக்கவிருக்கும் கலந்துரையாடலில் ஷேர் படத்தின் இயக்குனர் - தயாரிப்பாளர்களான பர்னா சாஸ், எல்லி வென், மற்றும் நடிகர் டிம் சாவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேலும், ஜூன் மாதத்தில் அமெரிக்க மையம் இந்த விஷயம் குறித்த அமெரிக்க இலக்கியங்களின் பட்டியலை வெளியிடுவதுடன், மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து மேலும் தகவல் அறிய ஆர்வம் உள்ளவர்கள் ChennaiAmCenter@state.gov என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

U.S. Consulate General Chennai Unfurls Rainbow Pride Flag to Commemorate Pride Month

கடந்த மே மாதம் 25 ஆம் தேதியன்று, சென்னை அமெரிக்க துணைத்தூதர் கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள "பாலினப் பூங்கா" (ஜெண்டர் பார்க்) என்ற அமைப்புடன் இணைந்து, பத்து வார கால வணிக ஆங்கிலப் படிப்பினை துவக்கி வைத்தார். இதன் மூலமாக எழுபதுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் திருநங்கையர் தொழில் முனைவோர்கள் பயன் பெறுகிறார்கள். பாலினப் பூங்கா என்பது ஐ.நா. பெண்கள் அமைப்பும், கேரள அரசாங்கமும் இணைந்து பாலின சமத்துவத்துக்காக உருவாக்கியிருக்கும் அமைப்பாகும்.

1969 ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பாலின சிறுபான்மையினரது "ஸ்டோன்வால்" போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் ஜூன் மாதம் "பெருமை மாதம்" என அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. எதிர்காலத்தில் செயற்பாடுகளுக்கும், சட்டங்களுக்கும் வழி செய்யும் வகையில் நவீன ஓரின விடுதலை இயக்கம் துவக்க இதுவே வித்திட்டது. மேலும், பெருமை மாதத்தில் உலகமெங்கும் வசிக்கும் பாலின சிறுபான்மை இனமும், அதைச் சார்ந்த தனிநபர்களும் சிவில் உரிமைகளுக்காகவும், சமநீதிக்காவும் மேற்கொண்ட போராட்டங்களும் நினைவு கூறப்படுகிறது.

சென்னை, அமெரிக்க துணைத் தூதர் ஜுடித் ரேவின், பெருமை மாதத்தை துவக்கி வைத்து, வானவில் கொடியேற்றியபோது ஆற்றிய உரையின் காணொலியை இங்கே காணலாம்:

English summary
The U.S. Consulate General Chennai hoisted the rainbow Pride flag over the Consulate building to commemorate Lesbian, Gay, Bisexual, Transgender, Queer, and Intersex (LGBTQI+) Pride Month on Wednesday, June 2. The Pride flag will remain displayed on the building through June 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X