சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''அமைச்சர் பதவி கிடைக்கலனு வருத்தம் உள்ளதா?''.. இதுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: ''உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று ஏதேனும் வருத்தம் உள்ளதா?'' என்று கேள்வி கேட்ட நிருபருக்கு உதயநிதி நச்சென்று பதில் அளித்துள்ளார்.

Recommended Video

    Stalin அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை.. என்ன காரணம்?

    தி.மு.க.வினர் 10 ஆண்டுகளாக எதிர்பார்த்த நிகழ்வு இன்று நடந்து விட்டது. பல்வேறு சவால்களை முறியடித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர் தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், அவரது தலைமையில் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    கடந்த 2-ம் தேதி தி.மு.க அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி விட்டது என்று அறிவிக்கப்பட்டவுடன் அனைவரின் அடுத்த எதிர்பார்ப்பு ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறப்போவது யார்? யார்? என்பது தான். இதனை தொடர்ந்து பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாலை அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது.

    எல்லோரும் தேடிய ஒரு பெயர்

    எல்லோரும் தேடிய ஒரு பெயர்

    தி.மு.க அமைச்சரவையில் வழக்கம்போல் அனுபவசாலிகள் நிறைந்திருந்தனர். 15 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் ஸ்டாலின். அப்போது அமைச்சரவை பட்டியலில் எல்லோரும் ஒருவரது பெயரை தேடினார்கள். ஆனால் அந்த பெயர் இல்லை. அந்த பெயருக்கு சொந்தக்காரர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

    சாதித்த உதயநிதி

    சாதித்த உதயநிதி

    இந்த தேர்தலில் திமுகவில் எல்லோருக்கும் அரசியல் அனுபவம் இருக்க, அரசியல் அனுபவம் இல்லாமல் முதன் முதலில் தேர்தல் களம் கண்டார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் தனது அதிரடியான தேர்தல் பிரசாரம் மூலம் தந்தையுடன் போட்டி போடும் விதமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். இதனால் உதயநிதிக்கு ஏதாவது அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்த்த வேளையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

    வருத்தம் உள்ளதா?

    வருத்தம் உள்ளதா?

    இன்னும் சில மாதங்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உதயநிதிக்கு பதவி கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்று கூறுகிறது திமுக வட்டாரங்கள். இந்த நிலையில் இன்று பதவியேற்பு விழா முடிந்தவுடன் '' உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று ஏதேனும் வருத்தம் உள்ளதா?'' என்று உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டனர்.

    உதயநிதி ஸ்டாலின் பதில்

    உதயநிதி ஸ்டாலின் பதில்

    உடனடியாக நிருபரை பார்த்து ''உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கிறதா? என்று எதிர் கேள்வி கேட்ட உதயநிதி ஸ்டாலின், '' அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று எந்த வருத்தமும் எனக்கு இல்லை'' என்று தெரிவித்தார். அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான திமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதை செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Udayanidhi Stalin said he had no regrets that the minister had not been appointed
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X