சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக இளைஞரணியில் உருவாகும் உதயநிதி டீம்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக இளைஞரணியின் மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சில மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. அதில் உதயநிதி டீம் ஒன்றும் தனியாக உருவாகி வருகிறது.

திமுகவில் சக்தி வாய்ந்த அமைப்பான இளைஞரணியின் தலைமைப் பொறுப்புக்கு ஸ்டாலினின் மகன் உதயநிதி சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். இது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி வரும் நிலையில் உதயநிதிதான் இந்த பொறுப்புக்கு தகுதியானவர் என்று உடன்பிறப்புகள் கம்பு சுற்றி வருகின்றனர்.

udayanidhi team to be formed in dmk youth wing

இந்த நிலையில் உதயநிதி இளைஞரணியில் சில மாற்றங்களை கொண்டு வரத் தொடங்கியுள்ளார். பொறுப்பேற்ற இரண்டாவது நாளே இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அப்போதே பல்வேறு இடங்களில் இருந்து வந்த நிர்வாகிகள் அவரிடம் பல்வேறு விதமான புகார் பட்டியலை வாசித்தார்கள். இதனைத் தொடர்ந்து அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இளைஞர் அணியில் பல சீனியர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஜெயங்கொண்டம் சுபா சந்திரசேகர் சூப்பர் சீனியர். இதுபோன்ற சீனியர் தலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இளையவரான உதயநிதிக்கு கொஞ்சம் சங்கட்டமாக இருக்கும் என்று உதயநிதி ஃபீல் பண்ணுகிறாராம். அதனால் இளைஞர் அணியில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்கின்றனர் உடன்பிறப்புகள். இதனால்தான் முதற்கட்டமாக நீ...ண்ட காலமாக இளைஞர் அணியிலேயே இருந்துவிட்ட ஜெயங்கொண்டம் சுபா சந்திரசேகருக்கு உதயநிதி பொறுப்பேற்கும்போதே அவர் சட்டத் திருத்த தீர்மானக் குழு உறுப்பினராக மாற்றப்பட்டார்.

நான் அம்மன் என்கிறார்.. தர்காவுக்குள் நுழைகிறார்.. உளறுகிறார்.. நிர்மலாதேவிக்கு என்னதான் பிரச்சனை?நான் அம்மன் என்கிறார்.. தர்காவுக்குள் நுழைகிறார்.. உளறுகிறார்.. நிர்மலாதேவிக்கு என்னதான் பிரச்சனை?

இது தவிர மாநில துணைச் செயலாளர்களாக ஆர்.டி.சேகர், அன்பில் மகேஷ், பைந்தமிழ் பாரி, ஜோயல், தாயகம் கவி, உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் உதயநிதியை விட வயதில் மூத்தவர்கள். ஆகவே உதயநிதி தனது வயதை ஒத்தவர்கள் தனது நெருங்கிய வட்டத்துக்குள் இருந்தால் சில முடிவுகளை எளிதாக எடுக்கமுடியும் என்றும், எடுத்த முடிவுகளை எளிதாக செயல்படுத்தவும் முடியும் என்றும் யோசித்து வருகிறார்.

இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி மாநில நிர்வாகிகள் வரை சிலரை தனது வயதை ஒத்தவர்களாக நியமிக்க உதயநிதி முடிவெடுத்துள்ளார். அதாவது இளைஞர் அணியின் டாப் டூ பாட்டம் வரை நியமிக்கப்படும் நிர்வாகிகள் அனைவருமே "உதயநிதி டீம்" ஆக இருப்பார்கள். இதில் மிக நீண்ட காலமாக இளைஞர் அணி பொறுப்பிலேயே இருந்து வருபவர்களுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

கீழ்மட்டத்தில் இருக்கும் ஒரு அதிகாரியே புதிதாக ஒரு இடத்திற்கு மாற்றலாகியோ அல்லது புதிதாக பொறுப்பேற்கும்போதே சில மாற்றங்களை நிகழ்த்துவார், குறைந்த பட்சம் அவருக்கான டேபிள் சேர் ஆகையவற்றையாவது இருக்கும் திசையை மாற்றி அமைப்பார் அப்படி இருக்கும்போது வலுவான ஒரு கட்சியின் சக்தி வாய்ந்த ஒரு அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கும் உதயநிதி மாற்றங்களை செய்ய மாட்டாரா என்ன?.

English summary
Udayanidhi Stalin will have his own team as per his choice in the Youth wing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X