• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆரம்பிச்சாச்சு.. ஸ்டாலினின் மூவ்.. உதயநிதிக்கு மெகா பொறுப்பு.. என்ன அசைன்மென்ட்?.. ஆபரேஷன் ஸ்டார்ட்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் ஆபரேஷன் ஆரம்பமாகிவிட்டது.. இதையடுத்து எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு காத்திருப்பதாகவும், அதற்கான அசைன்மென்ட்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

  Udayanithi-க்கு மெகா பொறுப்பு | Kongu மண்டலத்தில் களையெடுப்பை தொடங்கிய DMK | Oneindia Tamil

  தமிழ்நாடு முழுக்க ஓரளவு செல்வாக்கை திமுக பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் மட்டும் இறுதிவரை திமுகவால் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை.. தலைதூக்கவும் முடியவில்லை.

  கடந்த முறை திமுக ஆட்சியை இழக்க காரணமாக இருந்ததே இந்த கொங்கு மண்டலம்தான். இந்த முறை அபார வெற்றியை பெறமுடியாமல், ஓரளவு வெற்றியை பெற காரணமாக இருந்ததும் இந்த கொங்கு மண்டலம்தான்..!

  வீதி,வீதியாக.. நடந்து சென்று குறைகளை கேட்டறிந்த உதயநிதி.. உச்சி முகர்ந்து பாராட்டிய சேப்பாக்கம்! வீதி,வீதியாக.. நடந்து சென்று குறைகளை கேட்டறிந்த உதயநிதி.. உச்சி முகர்ந்து பாராட்டிய சேப்பாக்கம்!

  தோல்வி

  தோல்வி

  எப்படியும் 40 தொகுதிகளை வென்றுவிடலாம் என்று திமுக நினைத்தது.. ஆனால், வெறும் 17 இடங்களில்தான் வென்றது.. 20 இடங்களாவது கைப்பற்றியிருக்கலாமே என்ற வேதனை இப்போதும் ஸ்டாலினுக்கு இருக்கத்தான் செய்வதாக கூறப்படுகிறது.

  சாதி

  சாதி

  காரணம், அதிமுகவின் அரசியல் பலமும் & சாதி பலமும் திமுகவை ஒவ்வொரு முறையும் பதம் பார்த்து வருகின்றன.. இனி விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் வர போகிறது.. பஞ்சாயத்து தேர்தல், மற்றும் எம்பி தேர்தலில் எப்படியாவது கொங்குவை வளைத்து போட திமுக முயன்று வருகிறது.. அதற்கான முன்னெடுப்புகளை கையில் எடுத்து உள்ளது.

   ஊழல் பட்டியல்

  ஊழல் பட்டியல்

  அந்த வகையில்தான் ஒருபக்கம், மாஜிக்களின் ஊழல் பட்டியல் ரெடியாகி கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம், தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, கட்சியின் சட்டத்துறை ஆலோசகரான என்ஆர் இளங்கோவை கொங்குவுக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.. அவரும் களத்தில் இறங்கி, தோல்விக்கான காரணங்களை திரட்டி அறிக்கையாகவும் தலைமைக்கு தந்தார்.

  உட்பூசல்

  உட்பூசல்

  இதன் அடிப்படையில், திமுக தலைமை களையெடுப்பை ஆரம்பித்துள்ளது.. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்.. அதற்கு பதிலாக வரதராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளரான தென்றல் செல்வராஜ் மீது திமுக தலைமை அதிகம் நம்பிக்கை வைத்திருந்தது.. ஆனால், சரியாக தொகுதியில் இறங்கி வேலை பார்க்கவில்லையாம்.

  திமுக

  திமுக

  அதேபோல, பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் கோபம் அதிமுக மீது இருப்பதால், நிச்சயம் திமுகவை வெற்றி பெற வைத்துவிடுவார்கள் என்று நம்பப்பட்டது.. அதனால்தான் மக்களிடையே பிரபலமான டாக்டர் வரதராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்... எனினும் "சாதி அரசியலே" தலைதூக்கி அதிமுக வென்றுவிட்டது. இதை வரதராஜனே எதிர்பார்க்கவில்லை.. தன் தோல்விக்கு, மாவட்ட தலைமைதான் என்று புகார் சொல்லி அதற்கான ஆதாரத்தையும் மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் வரதராஜன்.

  களையெடுப்பு

  களையெடுப்பு

  இதன்பேரிலும்தான் களையெடுப்பு தற்போது நடந்துள்ளது.. இதைவிட முக்கியம், கோவையின் பல திமுக நிர்வாகிகள் எஸ்பி வேலுமணியுடன் தொடர்பில் இருப்பவர்களாம்.. அதனால்தான், உள்ளடி வேலை நடந்து, கோவையில் திமுக தோல்வி அடைந்தது என்று தொண்டர்களே கருதுகிறார்கள். இதைதவிர, இந்த முறை தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காதவர்களும், திமுக வெற்றிக்கு களப்பணியை செய்யவே இல்லை என்றும் தெரியவந்துள்ளது. அதற்கான ஆபரேஷனைதான் திமுக இப்போது செய்து வருகிறது.

  உதயநிதி

  உதயநிதி

  இப்படிப்பட்ட சூழலில்தான் உதயநிதியின் பெயர் இன்னும் பலமாக அடிபட்டு வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு கொங்கு மண்டலத்தை சரி செய்ய உதயநிதி ஸ்டாலினே விரும்புவதாகவும் கூறப்பட்டது.. அதற்காகத்தான், தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட, இந்த கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி கூடுதல் நாட்களை ஒதுக்கியிருந்தார்.. ஆனால், கொங்கு மண்டல தோல்வியால் உதயநிதியே சற்று அதிர்ச்சி ஆனார்.. இப்போது உதயநிதியையே மேற்கு மண்டல அமைப்பு செயலராக நியமித்து, கட்சியை பலப்படத்த திமுக தலைமை யோசித்து வருகிறதாம்.

  கோவை

  கோவை

  கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, "தேர்தல் தோல்விக்கு காரணமான, மாவட்ட செயலர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள், அடுத்து வரும் தேர்தல்களில் கட்சிக்கு வெற்றி தேவை என்பதால், அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை தலைமை செய்யும்" என்றும் கூறியிருந்தார். ஆக, களையெடுப்பு + புதிய நியமனங்களை கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாகவே வருகிறது.. பார்ப்போம்!

  English summary
  Udayanithi Stalin can take Kongu Region administrator, say Source
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X