சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன ஒரு சென்டிமெண்ட்! 100 நாள் பிரச்சாரத்தை நாளை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கான 100 நாள் பிரச்சாரத்தை நாளை திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்குகிறார்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே தொடக்கத்திலோ நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருக்கிறது. அதிமுகவின் இரண்டாவது ஐந்து ஆண்டுகால ஆட்சி காலம் முடிய இன்னும் 6 மாதங்களே உள்ளது.

அமித்ஷாவின் நெருக்கடிகளை எதிர்கொள்வது எப்படி? நாளை மறுநாள் அதிமுக ஆலோசனைஅமித்ஷாவின் நெருக்கடிகளை எதிர்கொள்வது எப்படி? நாளை மறுநாள் அதிமுக ஆலோசனை

தேர்தல் வேலைகள்

தேர்தல் வேலைகள்

அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகியவை மற்றொரு அணியாகவும் இப்போது உள்ளன. இரு அணிகளுமே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும்.

திமுக தீவிர வேலை

திமுக தீவிர வேலை

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று திமுக தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஸ்டாலின் மட்டுமின்றி, ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

உதயநிதி சென்டிமெண்ட்

உதயநிதி சென்டிமெண்ட்

சட்டப்பேரவை தேர்தலுக்கான 100 நாள் பிரச்சாரத்தை சென்டிமெண்ட்டாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்குகிறார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முதல்கட்டமாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருகுவளை டூ வேதாரண்யம்

திருகுவளை டூ வேதாரண்யம்

மணப்பாறையில் திருமண நிகழ்ச்சியில் நாளை காலை பங்கேற்கும் உதயநிதி அங்கிருந்து திருவாரூர் மாவட்டம் திருக்குவளை செல்கிறார். அங்கிருந்து வேதாராண்யம் சென்று உப்பள தொழிலாளர்களை சந்திக்கும் உதயநிதி. செல்லும் வழியில் கிராம மக்களை சந்திக்கிறார்.

English summary
DMK Youth Secretary Udayanithi Stalin will start the 100-day campaign for the Assembly elections from Thirukuvalai tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X