சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேசாம வந்துடுங்க மேயரா.. ஒன்னும் கஷ்டம் இல்லை.. உதயநிதியை அசரடித்த நாராயணப்பா தாத்தா!

நாராயணப்பாவை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரலாகும் DMK தாத்தா ! #TNopposeCAA

    சென்னை: "நீங்க மேயர் எலக்‌ஷன்ல நிக்கும்போது, நான்தான் வந்து வேலை செய்வேன்.. வந்துடுங்க மேயரா.. ஒன்னும் கஷ்டம் இல்லை.. மேயரால்லாம் வரமாட்டேன்'னு பேப்பர்ல சொல்லாதீங்க" என்று உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் தீவிர விசுவாசி நாராயணப்பா பாசத்துடன் அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் கடந்த 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், எம்பிக்கள், பிற அமைப்பினரும் கலந்து கொண்டு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தி, அசத்திவிட்டனர்.

    இந்த போராட்டத்தில் ஓசூரை சேர்ந்த 85 வயது முதியவர் நாராயணப்பா என்பவரும் கலந்துக்கொண்டார். பேரணியில் இவர் நடந்து வர தொடங்கியது முதலே மீடியாவின் மொத்த கவனத்தையும் இவர் அள்ளிவிட்டார்.

    குடியுரிமை சட்டத்துக்கான போராட்டத்தை எந்த நிலையிலும் திரும்ப பெற முடியாது.. திருமா திட்டவட்டம்குடியுரிமை சட்டத்துக்கான போராட்டத்தை எந்த நிலையிலும் திரும்ப பெற முடியாது.. திருமா திட்டவட்டம்

    தீவிர பணி

    தீவிர பணி

    மிக மிக தீவிரமான திமுகவின் தொண்டர்.. கருணாநிதியின் மீது அளவுக்கு அதிகமான பாசத்தையும், மரியாதையையும் வைத்திருப்பவர்.. தள்ளாத வயதில் இவர் நடந்து வந்ததும்தான், நாராயணப்பா என்ற பெரியவரை பற்றி ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளுக்கே தெரியவந்தது.

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயம்

    இதையடுத்து, நாராயணப்பாவை அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் அழைத்து பேசினார். நாராயணப்பாவுக்கு கருணாநிதியின் சின்ன சிலை ஒன்றையும், ஒரு புத்தகத்தையும் பரிசாக தந்தார்.. நாராயணப்பாவின் கைகளை ஸ்டாலின் இறுக பற்றிக் கொண்டு பேசியது தொண்டர்களை நெகிழ வைத்தது.. அந்த வீடியோவையும் தன் ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்தும் "கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு" என்ற வாசகத்தையும் பதிவிட்டார்.

    சந்திப்பு

    சந்திப்பு

    அதேபோல, திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் நாராயணப்பாவை நேரில் சந்தித்து பேசினார்.. நாராயணப்பாவுடன் சிரிப்பு + அக்கறை கலந்து உதயநிதி பேசியதை தன் ட்விட்டர் பக்கத்திலும் "இந்த பிணைப்புதான் திமுக" என்ற வாசகத்துடன் இதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் உரையாடல்தான் இது:

    வீடியோ

    நாராயணப்பா: நீங்க மேயர் எலக்‌ஷன்ல நிக்கும்போது, நான்தான் வந்து வேலை செய்வேன்.. வந்துடுங்க மேயரா.. ஒன்னும் கஷ்டம் இல்லை.. மேயரால்லாம் வரமாட்டேன்'னு பேப்பர்ல சொல்லாதீங்க.. கட்சிக்காரங்க எல்லாம் வேண்டாம்னு சொல்றாங்கன்னு பேசாதீங்க..

    உதயநிதி: நீங்க கட்சியில ஏதாவது பொறுப்புல இருக்கீங்களா?

    நாராயணப்பா: இல்லை.. தொண்டர் படையில இருந்தேன்.. முல்லைவேந்தன்தான் தலைவர்கிட்ட சொல்லி எனக்கு ஓசூர்ல.. சமத்துவபுரத்துல வீடு வாங்கி தந்தாரு.."

    உதயநிதி: "நீங்க நேத்து போராட்டம் முடிச்சிட்டு வீட்டுக்கு போய்ட்டீங்களா?

    நாராயணப்பா: ஆமா.. போய்ட்டேன்..

    உதயநிதி: எதுல வந்தீங்க?

    நாராயணப்பா: ட்ரெயின்ல வந்தேன்..

    உதயநிதி: தனியாவா வந்தீங்க?

    நாராயணப்பா: ஆமா.. எப்பவுமே ஒசூர்ல இருந்து தனியாதான் வருவேன்.. ஒருத்தனே வந்து போவேன்.

    உதயநிதி: நேத்தெல்லாம் இங்க எல்லாரும் உங்களை பத்திதான் பேசிட்டு இருந்தாங்க..

    நாராயணப்பா: சந்தோஷம்..

    உதயநிதி: உங்க வீட்ல எல்லாம்?

    நாராயணப்பா: பசங்க எல்லாரும், தாத்தா குடுத்த சமத்துவபுரம் வீட்லதான் குடியிருக்கோம்..

    உதயநிதி: பையன் என்ன பண்றாரு

    நாராயணப்பா: கூலி வேலை

    உதயநிதி: பேரன்கள்? அவங்க என்ன பண்றாங்க?

    நாராயணப்பா: எல்லாரும் சின்ன பசங்க.. படிக்கிறாங்க.

    உதயநிதி: என் படம் எல்லாம் பார்த்திருக்கீங்களா?

    நாராயணப்பா: ஊம்.. நிறைய.. உங்க வால்போஸ்டரை பார்த்துடுவேன்

    உதயநிதி: எல்லார் மேலயும் கேஸ் போட்டிருக்காங்க.. உங்க மேலயும் போட்டிருக்காங்களா?

    நாராயணப்பா: போடட்டும்.. நான் தான் சொன்னேனே ஐஜிகிட்டேயே.. வழக்கு போடுனு சொல்லிட்டேன்

    உதயநிதி: நீங்க ஜெயிலுக்கு போயிருக்கீங்களா?

    நாராயணப்பா: ம்.. ஒரு 30 போராட்டத்துக்கு மேல போயிருக்கேன்.. நான் செத்து போனா தளபதி ஸ்டாலின் வர்றாரு.. உதயநிதி வர்றாருன்னு ஜனங்க சொல்லுவாங்க.. எனக்கு அதுவே போதும் பெருமை

    உதயநிதி: உங்களை பார்த்தது எனக்கு பெருமை

    நாராயணப்பா: எனக்கு உங்க கார்டை குடுங்க.. ஏன்னா நான் அடிக்கடி மெட்ராஸ் வருவேன்.. கர்நாடகா அவரைக்காய் எடுத்துட்டு வர்றேன். எப்போ வந்தாலும் உங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு போய்டுவேன்

    உதயநிதி: எப்ப வந்தாலும் வீட்டுக்கு வாங்க" என்று அந்த வீடியோ முடிகிறது

    உண்மைதான்.. "கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு" இந்த வீடியோவில் இழையோடுவதை உணர முடிகிறது!

    English summary
    dmk youth wing secretary udhayandhi stalin meets 85 years old narayanappaa and this video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X