சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வணக்கத்துக்குரிய மேயர்" ஆவாரா உதயநிதி ஸ்டாலின்.. திமுகவினரிடையே திடீர் ஆர்வம்!

மேயர் பதவிக்கு உதயநிதி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    'வணக்கத்துக்குரிய மேயர்' ஆவாரா உதயநிதி ஸ்டாலின்.. திமுகவினரிடையே திடீர் ஆர்வம்!

    சென்னை: அங்கு போட்டியிடுவார்.. இங்கு போட்டியிடுவார் என்று கூறிக் கொண்டிருந்தனர். இப்போது மேயர் பதவிக்கு வந்து நிற்கின்றனர் திமுகவினர்.. அதாவது சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலினை நிறுத்த வேண்டும் என்று திமுக தலைமையிடம் இளைஞர் அணியினர் மனு கொடுத்துள்ளனர்.

    உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் தனது தந்தை மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இருந்து வந்தார். அவரை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்ல ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான் அனைவரும் எதிர்பார்த்தபடி இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதியிடம், ஸ்டாலின் ஒப்படைத்தார்.

    இளைஞர் அணிக்கு வந்தது முதல் புயலாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கட்சியின் அமைப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்க தீவிரமாக முயன்று வருகிறார். அவரது செயல்பாடுகள் கட்சியின் சீனியர்களிடையே இரு விதமான கருத்துக்களை பெற்றாலும் கூட இளைஞர் அணியினர் மகிழ்வாகவே உள்ளனர்.

     பாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது! பாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது!

     கோரிக்கை

    கோரிக்கை

    இளைஞர் அணிக்கு உதயநிதியை கொண்டு வருவதற்கு முன்பே அவரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவாகவே இருந்து வந்தன. லோக்சபா தேர்தலில் அவரை திருச்சியில் போட்டியிட வைக்கலாம் என்று ஒரு கருத்து கிளம்பியது. ஆனால் தொகுதியை காங்கிரஸ் பக்கம் தள்ளி விட்டது திமுக.

     காங்கிரஸ்

    காங்கிரஸ்

    அடுத்து நாங்குநேரிக்கு இடைத் தேர்தல் வந்தது. அங்கு நிச்சயம் உதயநிதிதான் போட்டியிடப் போகிறார் என்று கூறி வந்தனர். ஆனால் அந்தத் தொகுதியையும் காங்கிரஸிடமே கொடுத்து விட்டது திமுக. அது உண்மையில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதிதான். எனவே அதை தங்கள் வசம் திமுக எடுக்கவில்லை.

     உதயநிதி

    உதயநிதி

    சரி, விக்கிரவாண்டியிலாவது உதயநிதியை நிறுத்தலாம் என்று எதிர்பார்த்தனர். பொன்முடி தரப்பு எப்படியும் உதயநிதியை ஜெயிக்க வைத்து விட ஆர்வமாகவும் இருந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. அந்தத் தொகுதி இடைத் தேர்தலில் பரிதாபமாக அதிமுகவிடம் தோற்று விட்டது திமுக. இப்படி அங்குமிங்குமாக உதயநிதியின் பெயரை அவர் மீது அபிமானம் கொண்டவர்கள் அலைக்கழித்து வந்த நிலையில் தற்போது மேயர் தேர்தலுக்கு வந்து நின்றுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். சென்னை மேயர் பதவிக்கு உதயநிதியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பியுள்ளது இப்போது.

     திமுக குடும்பம்

    திமுக குடும்பம்

    தி.நகர் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சிற்றறசு என்பவர் உதயநிதிக்கு சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளார். இதனால் திமுகவினரிடையே புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. சென்னை மேயர் பதவிக்கும் திமுக குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம், ஆரம்பத்தில் மு.க.ஸ்டாலினை படிப்படியாக உயர்த்தி அழகு பார்த்த மறைந்த தலைவர் கருணாநிதி மேயர் பதவியை ஸ்டாலினிடம் கொடுத்தார்.

    சாதனை

    சாதனை

    சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது சிங்காரச் சென்னை திட்டத்தைக் கையில் எடுத்தார். நகரில் பல இடங்களில் உயர் மட்ட மேம்பாலங்களைக் கட்டி போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்தார். அவருக்கு அப்போது கடும் போட்டியைக் கொடுத்து டென்ஷனைக் கொடுத்தார் துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன். ஆனால் அதையும் தாண்டி நல்லமேயராக சென்னை மக்களை வசீகரித்தவர் ஸ்டாலின்.

     எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    அந்த வகையில் இப்போது உதயநிதியையும் மேயராக்கினால் அவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். அனுபவம் கிடைக்கும். நிர்வாகத் திறன் கூடும்.. அது அவரது உயர்வுக்கு எளிதாக இருக்கும் என்று திமுக இளைஞர் அணியினர் எதிர்பார்க்கிறார்களாம். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்வார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

    English summary
    dmk youth wing gives application on behalf of udhayanidhi stalin for chennai mayor candidate
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X