சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுயமரியாதை அரக்கனை இந்த சனாதன சாக்கடைகளால் ஒன்றும் செய்ய முடியாது.. பாஜக மீது உதயநிதி பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: சுயமரியாதை அரக்கனை இந்த சனாதன சாக்கடைகளால் ஒன்றுமே செய்ய முடியாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 46 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தின.

இந்த நிலையில் பெரியாரை கடுமையாக விமர்சித்து தமிழக பாஜக ஒரு ட்விட் போட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து அந்த ட்வீட்டை பாஜக நீக்கிவிட்டது.

துணிந்துவிட்டீரா


இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருக்கையில் #Periyar எனும் சுயமரியாதை அரக்கனை இந்த சனாதன சாக்கடைகளால் ஒன்றும் செய்துவிடமுடியாது. ஆனாலும்
@BJP4TamilNadu -ன் வக்கிரத்தைக் கண்டுகூட ஆளும் அடிமை அதிமுக அரசு அமைதி காக்கிறது. பதவிக்காகப் பெரியாரைக்கூட இழக்கத் துணிந்துவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி

உதயநிதி

அது போல் திமுக தலைவர் முக ஸ்டாலின்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக திமுகவில் செயலாற்றி வரும் உதயநிதி அக்கட்சி ஏற்பாடு செய்த போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

விமர்சனம்

விமர்சனம்

அது போல் மத்திய அரசு, தமிழக அரசு, என அனைவரையும் விமர்சித்து வருகிறார். குடியுரிமை சட்டம் குறித்து கூறிய ரஜினி, எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை ஒரு தீர்வாகாது என்ற அவரது கருத்தை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும்

பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும்

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் என்றார் உதயநிதி.

English summary
DMK youth wing Secretary Udhayanidhi Stalin criticises Tamilnadu BJP for its comment against Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X