சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாற்றியோசி... இலவச ஹெல்மெட் விநியோகித்த உதயநிதி ரசிகர் மன்றத்தினர்...!

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான சைக்கோ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்ததை அடுத்து அவரது ரசிகர் மன்றத்தினர் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினர்.

வழக்கமாக வெள்ளிக்கிழமை தோறும் எந்த நடிகரின் படம் வெளியாகிறதோ அந்த நடிகரின் ரசிகர்கள் பால் அபிஷேகம், கட் அவுட்டுக்கு மாலை என்று தான் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதனால் யாருக்கும் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை என உணர்ந்த உதயநிதி ரசிகர் மன்றத்தினர, இலவச ஹெல்மெட் விநியோகத்தை கையில் எடுத்தனர். மேலும், தனது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம், மாலை என எதுவும் வேண்டாம் என்று ஏற்கனவே கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார் உதயநிதி.

Udhayanidhi stalin Fans Forum Distributed Free Helmet

இதனால், சற்று வித்தியாசமாக பொதுமக்களுக்கு பயனுள்ள காரியத்தை செய்ய வேண்டும் என எண்ணிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள் இலவச ஹெல்மெட் விநியோகம் செய்யலாம் என முடிவெடுத்தனர். அதன்படி சென்னை சத்யம் திரையரங்கம் முன்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பாபு, வினோத் உள்ளிட்டோர் இலவச ஹெல்மெட் விநியோகத்தை துவக்கி வைத்தனர்.

Udhayanidhi stalin Fans Forum Distributed Free Helmet

கடந்த 24-ம் தேதி வெள்ளிக்கிழமை முழுவதும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் என பல பகுதிகளில் இலவச ஹெல்மெட் விநியோகம் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டிய நடைமுறை அமலில் உள்ளதால், இலவச ஹெல்மெட்டை போட்டிபோட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் வாங்கிச் சென்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் தீவிர ரசிகர் வினோத், மற்றவர்களை போல் பட்டாசுகளை வெடித்தோ, பால் அபிஷேகம் செய்தோ, ஆடம்பர முறையில் பட வெளியீடு விழாவை நாங்கள் கொண்டாடுவதில்லை. உதயநிதி திரைப்படம் திரைக்கு வரும் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு பயனுள்ள காரியத்தை மட்டுமே ஆற்றிவருகிறோம் எனத் தெரிவித்தார்.

English summary
Udhayanidhi stalin Fans Forum Distributed Free Helmet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X