"உண்மையின் உரைகல்" புதுக்கோட்டையில் உதயநிதிக்கு இந்த நினைவுப்பரிசா?.. சீண்டும் திமுக! கடுப்பான பாஜக!
சென்னை: புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் கொடுத்த நினைவுப்பரிசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரிசை பார்த்ததும் உதயநிதி சிரித்துவிட்டார்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
அந்த வகையில் மதுரைக்கு பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதி, "மத்திய அரசு கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நான் கையோடு கொண்டு வந்துள்ளேன்" என கூறியிருந்தார்.
”கழகத் தலைவன்” ஆகும் உதயநிதி ஸ்டாலின்.. திமுகவில் அல்ல - அங்கதான் ட்விஸ்ட்

மக்களுக்கு குழப்பம்
மக்களுக்கு ஒரே குழப்பம், பின்னர் கையில் ஒரு செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி அதை காண்பித்து, செங்கல்லில் மட்டுமே மத்திய அரசின் திட்டங்கள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டினார். உதயநிதியின் செங்கல் பிரச்சாரம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

செங்கல்
அத்துடன் செங்கல்லை காணவில்லை என பாஜகவினர் உதயநிதி மீது போலீஸில் புகார் அளித்தனர். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் அந்த எய்ம்ஸ் செங்கல்லை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மதுரையை போல் வேறு எங்கெல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லையோ அங்கெல்லாம் இந்த செங்கல் போராட்டம் வெடித்தது.

புதுக்கோட்டை
இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஒரு திருமண விழாவிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அவருக்கு எய்ம்ஸ் செங்கல்லை போல் ஒரு நினைவுபரிசை தயார் செய்து அதில் உண்மையின் உரைகல் உதயநிதி ஸ்டாலின் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நினைவுப்பரிசை கண்டதும் உதயநிதி வாய்விட்டு சிரித்து பெற்றுக் கொண்டார்.

அதிமுக- பாஜக
பின்னர் இந்த திருமண விழாவில் உதயநிதி பேசிய போது அதிமுக பாஜக போன்று இல்லாமல் மணமக்கள் இணைந்து வாழ வேண்டும் என்று கூறினார். அவருக்கு அமைச்சர் பதவியை கொடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள் என்பதும் அதை உதயநிதி தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.