சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஜே.என்.யூ மாணவர்களுடன் சந்திப்பு.. கனிமொழியையடுத்து அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தாக்குதலுக்கு உள்ளான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை, நாளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

ஹாஸ்டல் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள், இடதுசாரி மாணவர்கள் மற்றும் பிற மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

Udhayanidhi Stalin is going to meet Delhi Jawaharlal Nehru University students

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமூடி அணிந்தபடி உள்ளே சென்ற ஒரு மர்ம கும்பல், அடுத்தடுத்து கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்தது. பயங்கர ஆயுதங்களால் அவர்கள் சரமாரியாக அடித்து நொறுக்கியதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ் படுகாயம் அடைந்தார்.

பல்வேறு விடுதி அறைகள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி ஜே.என்.யூ பல்கலைக்கழகம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினார்.

திருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியதுதிருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது

இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில், குரலெழுப்பபோவதாகவும், தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் என்றால் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை டெல்லி சென்று ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க உள்ளார்.

இது இளைஞர்கள் தொடர்பான பிரச்சினை என்பதால் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்றால் தேசிய அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது திமுக தலைமையின் யோசனையாக இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
DMK youth wing secretary Udhayanidhi Stalin is going to meet Delhi Jawaharlal Nehru University students on Sunday days after Kanimozhi met the students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X