சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ராஜன் டீம்".. சட்டசபை முடிந்ததும் நேராக கிளம்பி சென்ற உதயநிதி.. 15 நிமிடம் நடந்த மீட்டிங்.. பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபை கூட்டம் முடிந்த உடனே திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையிலான குழுவை நேரடியாக சந்தித்தார்.

Recommended Video

    TN Assembly முடிந்ததும் நேராக கிளம்பி சென்ற உதயநிதி | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு இதற்காக சட்டம் கொண்டு வரும் முடிவில் உள்ளது.

    இதற்காக தமிழ்நாடு அரசு தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து உள்ளது. சட்ட ரீதியான பிரச்சனைகள் வர கூடாது என்பதால் முறையாக குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின் பெயரில் நீட் தேர்வை முறையாக ரத்து செய்யும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது.

    கோவையை புறக்கணிக்கிறீர்களா?.. கேள்வி எழுப்பிய நயினார்..சுடச்சுட நச் பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்கோவையை புறக்கணிக்கிறீர்களா?.. கேள்வி எழுப்பிய நயினார்..சுடச்சுட நச் பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் நீதிபதி ராஜன் தலைமையிலான குழு இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டது. நீட் தேர்வின் சாதக, பாதகங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்று அஞ்சல் முகவரி மற்றும் மெயில் முகவரியை ராஜன் குழு வெளியிட்டு இருந்தது. ராஜன் டீம் மெயில் ஐடி கொடுத்த சில நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மெயில்கள் வந்து இதில் குவிந்தன.

    மெயில்கள்

    மெயில்கள்

    அதேபோல் போஸ்டில் நிறைய நீட்டிற்கு எதிரான கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் அப்பாவும், இந்த தேர்விற்கு எதிராக கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில்தான் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று சட்டசபை கூட்டம் முடிந்த கையோடு நேரடியாக சென்று ராஜன் டீமை சந்தித்தார். நீட் தேர்வு அரசியல்பூர்வமற்றது. இப்படிப்பட்ட தேர்வு மக்களுக்கு எதிரானது.

    சமத்துவம்

    சமத்துவம்

    சமத்துவத்திற்கு எதிரான தேர்வு முறை இது. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். 13 பேர் இந்த நீட் தேர்வால் தமிழ்நாட்டில் பலியாகி உள்ளனர். 12ம் வகுப்பு தேர்வை விட நீட் தேர்வு மூலம் எப்படி தகுதியை கண்டுபிடிக்க முடியும். இது ஏற்றத்தாழ்வை திணிக்க கூடியது.

    கனவு

    கனவு

    ஏழை மாணவர்களின் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை குலைக்கும் வகையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது, என்று உதயநிதி ஸ்டாலின் ராஜன் குழுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யும்படி உதயநிதி கோரிக்கை வைத்தார்.

    எம்எல்ஏ

    எம்எல்ஏ

    ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் நேரடியாக ராஜன் குழுவை சந்தித்து, நீட்டிற்கு எதிராக கோரிக்கை வைப்பது இதுதான் முதல்முறை. நீட் தேர்விற்கு எதிராக ராஜன் குழுவிற்கு நிறைய கோரிக்கைகள் சென்று இருக்கின்றன. இதுவரை வந்த கோரிக்கைகளில் அதிகபட்ச கோரிக்கை நீட் தேர்வுக்கு எதிராகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK MLA Udhayanidhi Stalin meets Rajan Committee to give a letter against Neet Exam yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X