சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

30 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி கொண்டு வந்த சட்டம்.. இன்று உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சி.. உதயநிதி

Google Oneindia Tamil News

சென்னை: சமூக சீர்த்திருத்தங்களை முன்னெடுக்கும் முன்னோடி இயக்கம் திமுக என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்டதிருத்தம்) 1989இன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. நாட்டிலேயே முதல்முறையாக புரட்சிகரமான இந்த திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.

Udhayanidhi Stalin recalls his Grandfather Karunanidhi on equal rights in assets act

இதன் மூலம் பெரியாரின் கனவை கருணாநிதி நனவாக்கினார். இந்த சட்டம் தமிழகத்தில் மட்டும் இருந்த நிலையில் சொத்தில் ஆண்களை போல் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சசிகலா இல்லாத வாழ்க்கையா.. முடியலை... தண்டவாளத்தில் பாய்ந்து.. தலையைக் கொடுத்த கணவர்!சசிகலா இல்லாத வாழ்க்கையா.. முடியலை... தண்டவாளத்தில் பாய்ந்து.. தலையைக் கொடுத்த கணவர்!

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உண்டென முத்தமிழறிஞர் கலைஞர் 30 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் சட்டம் இயற்றினார்.

Udhayanidhi Stalin recalls his Grandfather Karunanidhi on equal rights in assets act

அதை நாடெங்கும் உறுதிப்படுத்தும் மகத்தான தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். சமூக சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் முன்னோடி இயக்கம் திமுக என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK youth wing Secretar Udhayanidhi Stalin recalls his Grandfather Karunanidhi on equal rights in property act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X