சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு ஆள் நுழையும் சந்து.. குனிந்தபடியே குடிசைக்குள் நுழைந்த உதயநிதி.. சர்ப்பிரைஸ் ஆன குமார்- செல்வி!

Google Oneindia Tamil News

சென்னை: திருவல்லிக்கேணி நடுக்குப்பம் கேனால் ஓரம் உள்ள குடிசை வீட்டை பார்வையிட்ட எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

Recommended Video

    பந்தா இல்ல.. குனிந்தபடியே குடிசைக்குள் நுழைந்த Udhayanidhi | Oneindia Tamil

    தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே என்பதற்கேற்ப முதல்வராக பதவியேற்ற நாள் முதல் பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பது, தொகுதி மக்களை சந்திப்பது, கோரிக்கை மனுக்களை பெறுவது, திடீரென ரேஷன் கடைகளுக்கு விசிட் அடிப்பது என முதல்வர் ஸ்டாலின் ஒரு புறம் கலக்கி வருகிறார்.

    அது போல் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் தனது தொகுதிக்கு தினந்தோறும் விசிட் அடிக்கிறார். அங்கு பொதுமக்களின் குறைகளை கேட்டறிகிறார்.

    தொகுதி

    தொகுதி

    எம்எல்ஏவாக பதவியேற்றவுடன் நேராக தனது தொகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள குடிசை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதியில் நீண்ட நாட்களாக சேகரிக்கப்படாத குப்பை மேடு இருந்ததை மக்கள் கூறினர். இதையடுத்து உடனே குப்பையை சேகரிக்குமாறு தூய்மை பணியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    தொகுதி மக்கள்

    தொகுதி மக்கள்

    இதையடுத்து நீண்ட நாட்களாக பாழடைந்து துர்நாற்றம் வீசி வந்த ஒரு பொது கழிப்பறைக்குள் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் உள்ளே சென்று ஆய்வு செய்தார். தனது தொகுதி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என பார்வையிடுகிறார்.

    உதயநிதி

    உதயநிதி

    அந்த வகையில் ஒரு ஆளே நுழையும் குடிசை பகுதிக்குள் குனிந்து வளைந்து சென்ற உதயநிதி மாற்று இடம் தருவதாக உறுதியளித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் திருவல்லிக்கேணி பகுதி, நடுக்குப்பம், 8-வது தெருவைச் சேர்ந்த குமார்-செல்வி தம்பதியின் வீட்டுக்கு சென்றோம். அவர்களுடைய மகள் ஏசுமதி தன் வீட்டுச்சூழலையும், தந்தை குமாரின் உடல்நிலையையும் பற்றி எடுத்துக்கூறினார். அவர்களுடைய பிரச்சினை தீர்ப்பதாக உறுதியளித்தோம் என்றார்.

    பந்தா இல்லாத உதயநிதி

    பந்தா இல்லாத உதயநிதி

    நடிகர், எம்எல்ஏ என்ற பந்தா ஏதும் இன்றி மக்களோடு மக்களாக கலந்து குடிசை வீட்டில் சுவற்றில் கை வைத்து அந்த வீட்டாரின் குறைகளை கேட்ட விதத்தால் குடிசை வாழ் மக்கள் லயித்து விட்டனர். இந்த ஒரு வீடு மட்டுமல்ல , நிறைய பேரின் வீடுகளுக்குள் சென்று குறைகளை கேட்டுள்ளார். ட்விட்டரிலும் உதயநிதியின் செயல் பாராட்டை குவிக்கிறது.

    English summary
    MLA Udhayanidhi Stalin review in Triplicane Nadukuppam Canal slum area
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X