சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்குநேரி எனக்கே.. தாம் போட்டியிடத்தான் 'ஆழம் பார்த்தாரா' உதயநிதி?

Google Oneindia Tamil News

Recommended Video

    H Vasantha Kumar: நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்- வீடியோ

    சென்னை: நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கே கொடுக்க வேண்டும்; சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான தொகுதிகள் தரக் கூடாது என நடிகர் உதயநிதி 'முந்திரி கொட்டை'தனமாக பேசவில்லை.. இந்த பேச்சுக்கும் காரணம் இருக்கின்றது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

    லோக்சபா தேர்தலின் போது நடிகர் உதயநிதியை படுதீவிரமாக களமிறக்கியது திமுக. ஒவ்வொரு தேர்தல் காலமும் ஏதேனும் கொஞ்சம் காசு பார்த்து வந்த தலைமை கழக பேச்சாளர்கள் ஓரம்கட்டப்பட்டனர்.

    உதயநிதி அப்படி ஒன்றும் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து வாக்குகளை அள்ளிக் கொண்டு வந்துவிடவில்லை. அவர் மீதான நடிகர் ஈர்ப்புக்கு கூட்டம் சேர்ந்திருக்கலாம். காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, பாஜகவுக்கு எதிரான அலையால் திமுக அமோக வெற்றி பெற்றது.

    தமிழக சட்டசபை தேர்தல்: பாஜகவின் புதிய கூட்டணிகுறித்து ஆதரவாளர்களுடன் சு.சுவாமி ஆலோசனைதமிழக சட்டசபை தேர்தல்: பாஜகவின் புதிய கூட்டணிகுறித்து ஆதரவாளர்களுடன் சு.சுவாமி ஆலோசனை

    இளைஞரணியில் உதயநிதி

    இளைஞரணியில் உதயநிதி

    உடனே திமுகவின் மாவட்டங்களில், லோக்சபா தேர்தல் வெற்றிக்கு உதயநிதியின் அபார பிரசாரம்தான் காரணம் என அபாண்டமான பொய்யை முன்வைத்து அவருக்கே இளைஞரணிப் பொறுப்பை வழங்க வேண்டும் என அபத்தமான தீர்மானத்தை நிறைவேற்றினர். இத்தீர்மானத்தின் வேகம் திமுகவை படுவேகமாக மரணப்படுக்கைக்கே கொண்டு செல்லும் என அத்தனை முகாம்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    திருச்சி கூட்டத்தில் உதயநிதி

    திருச்சி கூட்டத்தில் உதயநிதி

    அதனால் தீர்மானங்களின் வேகத்தைக் குறைத்துக் கொண்டனர். ஆனாலும் ஆசையாரைவிட்டது.. திமுகவின் ஒவ்வொரு மேடையிலும் உதயநிதி ஸ்டாலினே முன்னிறுத்தப்படுகிறார். திருச்சியிலும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினுக்கு 2 சீட் தள்ளி உதயநிதிக்கு இடம். திமுகவில் எத்தனை கடைகோடி தொண்டனுக்கு இப்படியெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை.

    உதயநிதியின் துடுக் பேச்சு

    உதயநிதியின் துடுக் பேச்சு

    அது ஒருபக்கம் இருக்க.. அந்த கூட்டத்தில், காங்கிரஸ் வென்ற நாங்குநேரி தொகுதி திமுகவுக்குத்தான் வேண்டும் என்றார்; சட்டசபை தேர்தலில் அப்பாவை ஏமாற்றி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை வாங்கிவிடும். அதனால் குறைத்துதான் தர வேண்டும் என துடுக்குத்தனமாக பேசினார் உதயநிதி. இத்தகைய கட்சியின் கொள்கை சார் முடிவுகளை சிறுபிள்ளைத்தனமாக பொதுமேடையில் கூட்டணிக் கட்சியினர் முகம் சுழிக்கும் வகையில் உதயநிதி பேசியதை யாரும் ரசிக்கவில்லைதான்.

    உதயநிதி நாங்குநேரியில் போட்டி?

    உதயநிதி நாங்குநேரியில் போட்டி?

    ஆனால் தற்போதைய தகவல்களோ, தம் மீதான வாரிசு அரசியல் என்கிற பிம்பத்தை உடைப்பதற்காக தமது சகபாடிகளின் ஆலோசனைப்படி நாங்குநேரியில் களமிறங்கலாம் என யோசிக்கிறாராம் உதயநிதி.. அதற்கான ஆழம் பார்க்கும் நடவடிக்கையாகத்தான் இப்படி ஒரு பிட்டை வீசினாராம் உதயநிதி. அப்படி தாம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகிவிட்டால் தம்மை வாரிசு அரசியல் என யாரும் முத்திரை குத்திவிட முடியாது என முழுமையாக நம்புகிறார் உதயநிதி என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

    English summary
    Sources said that DMK President MK Stalin's on Udhayanidhi may contest in Nanguneri By Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X