சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கமிஷன் அடிப்பதில்தான் கவனம்.. மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள்".. உதயநிதி ஸ்டாலின் காட்டம்

மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே ஒதுக்கீடு கோரி, உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் எடுபிடி அரசு - வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் பாஜகவுக்கு துணைபோயுள்ளது. இதை தமிழக மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள். பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து 50% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் காட்டமாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஹைகோர்ட் உத்தரவை குறிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. அதில், ஹைகோர்ட் உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50சதவீத இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த வருடம் வழங்க முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டே மருத்துவ படிப்பில்.. ஓபிசிக்கு 50% ஒதுக்கீடு தர வேண்டும்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்இந்த ஆண்டே மருத்துவ படிப்பில்.. ஓபிசிக்கு 50% ஒதுக்கீடு தர வேண்டும்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

தீர்ப்பு

தீர்ப்பு

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது... அதன்படி, படிப்பில் ஒபிசி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், இடைக்கால நிவாரணம் கோரிய இந்த மனு நிராகரிக்கப்படுகிறது.

ட்வீட்கள்

ட்வீட்கள்

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

 வலுவான வாதம்

வலுவான வாதம்

அதில், "கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் எடுபிடி அரசு - வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத் துடிக்கும் பாஜகவுக்கு துணைபோயுள்ளது. இதை தமிழக மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள். பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து 50% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

 மருத்துவம்

மருத்துவம்

பட்டியலின மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் தர முடியாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததன் மூலம் பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மாணவர்கள் மருத்துவம் படிக்கவே கூடாது - அரியவகை ஏழைகள் மட்டும் படித்தால் போதும் என்று பாஜக அரசு சொல்லாமல் சொல்லியுள்ளது.

 மிகப்பெரிய அடி

மிகப்பெரிய அடி

மருத்துவ படிப்பில் BC, MBC-க்கான 50% இடஒதுக்கீட்டை இவ்வாண்டு வழங்கமுடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27% இடஒதுக்கீட்டை தரவும் பாஜகஅரசு மறுக்கிறது. இது அதிமுக அரசின் அடிமைத்தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Udhayanidhi Stalin tweeted about to ensure OBC reservation in Medical Admission this year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X