• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி!

|

சென்னை: செல்லுமிடமெல்லாம் உதயநிதிக்கு கூட்டம் கூடி வரும் நிலையில், ஆதரவு பெருகி வரும் நிலையில், அவரது இன்றைய பிறந்த நாள் விழாவும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இது சம்பந்தமான அறிக்கையில், "இது பேரிடர் காலம்... மக்கள் அச்சத்தில் உள்ளனர். யார் நம்மைக் காக்க வருவர்? எனத் தவிப்பில் உள்ளனர்.

அதனால், என் பிறந்தநாளை கொண்டாடுவதை தவிர்த்துவிட்டு, கனமழை பெய்யும் இடங்கள் மற்றும் புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இளைஞரணியினர் நிவாரணம் - மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

சட்டத்துக்கு தீங்கு விளைவிப்பதா... கங்கனா சொகுசு பங்களா இடிப்பு வழக்கில் கோர்ட் தீர்ப்பு!சட்டத்துக்கு தீங்கு விளைவிப்பதா... கங்கனா சொகுசு பங்களா இடிப்பு வழக்கில் கோர்ட் தீர்ப்பு!

 உதயநிதி

உதயநிதி

ஆனாலும், உதயநிதி ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை.. இன்று தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை கொண்டாடி அமர்க்களக்கப்படுத்தி வருகின்றனர்.. ஆனால், நல்ல முறையில் இந்த பிறந்த நாளை கொண்டாடி வருவது மக்களை உற்றுநோக்க வைத்து வருகிறது.

 மிசா சன்னே

மிசா சன்னே

சென்ற வருடம் உதயநிதிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் படுஅமர்க்களமானது.. அதற்கு காரணம், இளைஞரணி செயலாளராகப் பதவியேற்ற பிறகு நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதால், உடன்பிறப்புகள் ஏக உற்சாகத்தில் திளைத்தனர்.. இதில் சீனியர்கள் சிலர் கடுப்பானாலும் "சென்னை மேயரே.. மிசா சன்னே" என்று கட்அவுட்களை தெறிக்கவிட்டனர்.

 முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்

ஆனால், இந்த முறை அப்படி எதுவுமே இல்லை.. மாறாக, ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெஸ்ட் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், பெஸ்ட் நகரிலுள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆண், பெண் முதியோர்களுக்கு நேரில் சென்று உணவு மற்றும் உடை போன்ற அத்தியாவசிய தேவைகள் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது.

 தொழுநோய் மறுவாழ்வு இல்லம்

தொழுநோய் மறுவாழ்வு இல்லம்

அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்தில் இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்டது! உளுந்தூர்பேட்டை இளைஞர் அணி அமைப்பாளர் பா. குருமனோ, வெள்ளையூர் அரசு தொழுநோய் மற்றும் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்திலுள்ள 60 மேற்பட்ட முதியவர்களுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

 உதவிகள்

உதவிகள்

இதுபோலவே, கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக குணியமுத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட தலைவர் டேவிட்ராஜா மற்றும் மாவட்ட செயலாளர் உதயநிதி பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி கலந்துகொண்டு இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதி குமார் தலைமையில் பெருமாள் பேட்டையில் உள்ள சரணாலயம் டிரஸ்ட் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகள் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் மொத்தம் 250க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கினார்.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இப்படி தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்கள் ஒரு பக்கமும், திமுக இளைஞர் அணி மறுபக்கமும் என நலத்திட்டங்களை அள்ளி தெளித்துவருகின்றனர்.. அதுபோலவே, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வளர்ச்சி

வளர்ச்சி

உதயநிதி பொறுப்புக்கு வந்து 2 வருடம் காலம் முழுமையாக முடிவடையாத நிலையில், இந்த வளர்ச்சியை கண்டு உடன்பிறப்புகள் பூரித்து வருகின்றனர்.. செல்லுமிடமெல்லாம் உதயநிதிக்கு கூடும் கூட்டம் பிற கட்சிகளின் காதிலும் புகையை வரவழைத்து வருகிறது.. வழக்கமாக, தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இப்படி நலத்திட்டங்கள் வழங்கப்படுவது, இயல்புதான் என்றாலும், உதயநிதியின் விஸ்வரூப வளர்ச்சி எதையோ உணர்த்துவது போலவே இளம் ரத்தங்களுக்கு தென்பட்டு வருகிறது!

English summary
Udhayanidhi Stalins Birthday Celebrations today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X