• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அந்த 3 மேட்டர்கள்".. வேற வழியேயில்லை.. கியரை மாற்றிய ஸ்டாலின்.. உதயநிதிக்கு பறந்த மெகா அசைன்மென்ட்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு முக்கியமான விஷயம் கசிந்துள்ளது.. அது திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை பற்றியதுதான்..!

இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது திமுக.. இது தொடர்பான வருத்தம் ஸ்டாலினுக்கு இன்னமும் உள்ளது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே அவரது கணக்கு.

குறிப்பாக, கொங்கு மண்டலம்.. கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.. இத்தனைக்கும் இதே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த தேர்தலில் திமுக நல்ல வாக்கு வங்கியை வைத்திருந்தது.

ஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடிஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி

 உள்ளடி வேலை

உள்ளடி வேலை

திமுக எளிதாக வெற்றி பெறக்கூடிய இடங்களிலும் அதிமுக வெற்றிபெற்றது.. இதற்கு உள்ளடி வேலைகள் மற்றும் களப்பணிகளை மூத்த நிர்வாகிகள் யாரும் சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பின.. திமுக எங்கெல்லாம் தோல்வி அடைந்ததோ, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஸ்டாலின் ரிப்போர்ட் கேட்டிருந்து, அதன்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலும் நடக்க உள்ள நிலையில், திமுகவின் கொங்கு ஆபரேஷன் தொடர்ந்து வருகிறது.

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

அதன்படி, செந்தில் பாலாஜி மாஜிக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.. விரைவில் 15 அதிமுக எம்எல்ஏக்களை திமுக பக்கம் கொண்டு வரும் திட்டமும் கையில் உள்ளதாம்.. மாஜி அமைச்சர்கள் 2 பேர் திமுக பக்கம் வருவதற்கும் பேச்சு நடந்து கொண்டிருக்கிறதாம்.. மற்றொரு பக்கம், ஊழல் விவகாரங்களை திமுக கையில் எடுத்துள்ளதால், அதைவைத்து கொங்கு அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது.

 தனியார் நிறுவனம்

தனியார் நிறுவனம்

இப்படிப்பட்ட சூழலில்தான் மேலும் 3 விஷயங்கள் கசிந்துள்ளது.. திமுகவின் தோல்வி குறித்து உண்மை நிலவரத்தை அறிய, ஒரு தனியார் நிறுவனம் மற்றும் திமுகவை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் விசாரித்து வருகின்றனராம்.. இவர்கள் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஏற்பாட்டில் இந்த ஆய்வில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

 குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

அதன்படி, திமுகவில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், தோல்விக்கு காரணம், குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து, ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலர்கள் வரை, கடந்த வாரங்களில் விசாரித்து முடித்துள்ளனர்.. அந்த ரிப்போர்ட்டும் சபரீசனிடம் தரப்படுகிறது. இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் அடுத்த களையெடுப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்..

பிளான்கள்

பிளான்கள்

அடுத்ததாக, இளம் வாக்காளர்களை கவரும் யுக்திகளை கொங்குவில் இறக்க போகிறார்களாம்.. முக்கியமாக யாரெல்லாம் புது வாக்காளர்களோ, அவர்களை குறி வைத்தே பிளான்கள் நகர்த்தப்படுகின்றன.. இளைஞர்கள் மற்றும் பெண்களை திமுக பக்கம் இழுக்கும் முயற்சிதான் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.. அடுத்ததாக, உங்கள் ஊரில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் நிறைய புகார் மனுக்கள் மேற்கு மண்டலத்தில் குவிந்துள்ளதாம்..

உத்தரவு

உத்தரவு

இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.. இதை தவிர, வேறு சில அறிவிப்புகளையும், திட்டங்களையும் மேற்கு மண்டலத்தை குறி வைத்து விரைவில் வெளியாகலாம் என்றும், அதுவும் இந்த பட்ஜெட்டிலேயே வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள்..

உதயநிதி

உதயநிதி

இது எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் என்னவென்றால், மேற்கூறிய இந்த 3 திட்டங்களையும் கண்காணிக்கப்போவதே உதயநிதி ஸ்டாலின்தானாம்.. அவரது மேற்பார்வையில்தான் அனைத்தும் நடக்க போகிறதாம்.. ஏற்கனவே கொங்குவை உதயநிதியின் பொறுப்பில் தரப்போவதாக ஒரு பேச்சு எழுந்தது.. உதயநிதியும் அதற்கு ஆர்வமாக இருப்பதாகவே கூறப்பட்டது.. ஆனால், அது தற்போது மறுபடியும் உறுதியாகி உள்ளது.. ஆக, ஒரு பக்கம் மகன், மற்றொரு பக்கம் மாப்பிள்ளை, என்ற ரீதியில் முதல்வர் கொங்கு ஆபரேஷனில் இறங்கி உள்ளது தெரியவந்துள்ளது.. விரைவில் அங்கு திமுக கொடி பறக்கும் என்றும் நம்பப்படுகிறது..

English summary
Udhayanidhi Stalins next level plan in the Kongu Zone and Whats going on inside DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X