சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சொந்த ஆட்டோவை ஆட்டோ ஓட்டுநர் தீ வைத்துக் கொளுத்திய விவகாரத்தில் அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். அத்துடன் ஆட்டோவை கொளுத்திய நபருக்கு ஆட்டோ வாங்க உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்தார்.

சென்னை அண்ணாநகரில் தாண்ட முத்து என்பவர் தனது ஆட்டோவின் எப்சியை புதுப்பிக்க சனிக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அவரை அதிகாரிகள் அலைக்கழித்ததால் அவர் மனம் உடைந்தார். அங்கு திடீரென மன விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தனது ஆட்டோவை தீ வைத்துக் கொளுத்தியதுடன் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் அவரைக் காப்பாற்றினார்கள்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுநர் தாண்ட முத்துவை தனது இல்லத்திற்கு நேரடியாக வரச்சொல்லி புதிய ஆட்டோ வாங்க நிதியுதவி அளித்தார்.

கனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவுகனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவு

அதிகாரிகள் மீது புகார்

அதிகாரிகள் மீது புகார்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இப்போது நாம் பார்ப்பது ஒரே ஒரு தாண்ட முத்து தான். ஆனால், எத்தனையோ தாண்ட முத்துக்கள் தமிழகமெங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். சாதாரண மனிதர்களை மிரட்டி பணம் பார்ப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அதிமுக ஆட்சி அனைத்து துறைகளிலும் கரப்ஷன் கமிஷன் என்ற நிலையில்தான் சென்று கொண்டிருக்கிறது.

அமைச்சர் வழக்கு

அமைச்சர் வழக்கு

தமிழகத்தில் ஏராளமான மருத்துவர்கள் இறந்திருப்பதாக நான் கூறியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மறுக்கிறார். ஆனால் மருத்துவர்களின் இறப்பு எண்ணிக்கையை மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. நான் சொன்னது பொய் என்றால் அமைச்சர் என் மீது வழக்கு தொடுக்கட்டும் பார்க்கலாம் .

சாக்லேட் பாய்

சாக்லேட் பாய்

இ பாஸ் வழங்குவதில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுவதால் அதை ரத்து செய்ய வேண்டும். நான் தூத்துக்குடி சென்றதற்கு இ பாஸ் பெறவில்லை என்று கூறுகிறார்களே அப்படியென்றால் என் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லையே ஏன? ஜெயக்குமார் என்னை, சாக்லேட் பாய் என்று கூறிகிறார். அது கெட்ட வார்த்தையில்லை. ஆனால் அதைச் சொல்பவர் ஒரு ப்ளே பாய் " இவ்வாறு கூறினார்.

முதல்வர் பிடிவாதம்

முதல்வர் பிடிவாதம்

திமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் முறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட்டித்து வருவதாகவும், முதலில் இந்த இ-பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இ-பாஸ் முறை தேவையில்லை என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட காரணத்தினால், இ-பாஸ் தொடரும் என முதல்வர் எடப்பாடி பிடிவாதம் பிடிப்பதாகவும் உதயநிதி கூறினார்.

English summary
dmk youthwing leader Udhayanidhi who provided financial assistance to buy an auto for the person who set his own auto on fire
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X