சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெற்றியில் விபூதியை இட்டு.. இந்துக்கள் மனதை டக்குன்னு குளிர வச்சுட்டாரே.. சபாஷ் உதயநிதி.. !

திமுகவின் இந்து மத கொள்கைதான் என்ன என்ற விமர்சனம் எழுந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அப்பா முக ஸ்டாலின் நெற்றியிலிருந்து விபூதியை அழித்து கொள்கிறார்.. மகன் உதயநிதி ஸ்டாலின் விபூதியை வைத்து கொள்கிறார்.. இது என்ன நிலைப்பாடு? என்ற வாதம் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது.

விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒருபகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது 27-வது குருமகா சந்நிதானம் உதயநிதி ஸ்டாலினுக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார்.. மேலும் தமிழ்க்கடவுள் சேயோன் (முருகன் பாமாலை) என்ற மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

வாரிசு அரசியல்.. கண்ணாடி முன்நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட காமெடி போல் இருக்கு.. ஸ்டாலின் பதிலடிவாரிசு அரசியல்.. கண்ணாடி முன்நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட காமெடி போல் இருக்கு.. ஸ்டாலின் பதிலடி

 ஸ்டாலின்

ஸ்டாலின்

அதேபோல, குருபூஜை மலருக்கான திமுக தலைவர் ஸ்டாலினின் வாழ்த்து செய்தியை உதயநிதி ஸ்டாலின் குருமகா சந்திதானத்திடம் வழங்கி ஆசி பெற்றார். இதுதான் நடந்த சம்பவம்.. இதனை தேவர் குருபூஜைக்கு சென்ற ஸ்டாலின் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டிய விவகாரத்துடன் முடிச்சு போட்டு சோஷியல் மீடியாவில் எதிர்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் ஒரு சாரார்... இதுகுறித்து நடுநிலைவாதிகள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

 கருணாநிதி

கருணாநிதி

"எல்லாவற்றிற்கும் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், யாரும் இங்கே அரசியல் செய்ய முடியாது.. அன்று சாய்பாபாவை கலைஞர் வீட்டுக்கு வரவழைத்து கவுரவப்படுத்தினார்.. சாய்பாபா சமூக நலனுக்கான ஒரு போராளி.. விழாவில் பேசிய கருணாநிதி,"அருள்மிகு சாய்பாபா மக்கள் நலனுக்காக பாடுபடக்கூடியவர்.. துன்பங்களை துடைப்பதற்காக முயன்றவர்.. இத்தகையை நபர்கள், துறவிகளைவிட உயர்ந்தவர்கள்... இன்னும் சொல்ல போனால் கடவுளுக்கே நிகரானவர்கள" என்றார். இதையும்தானே அரசியலாக்கினார்கள்?

 என்ன ஆயிற்று?

என்ன ஆயிற்று?

பெரியாரின் சீடர், ஒரு உறுதி மிக்க நாத்திகர் எப்படி சாய்பாபாவை வீட்டுக்கு வரவழைக்கலாம்? கலைஞர் ஆன்மீகவாதியான சாய்பாபாவை ஏற்றுக் கொண்டு விட்டார், கருணாநிதியை சாய்பாபா ஆத்திகராக மாற்றிவிட்டார் என்று அன்று கிளம்பிய அவதூறுகள் எல்லாம் என்னவாயிற்று?

 தவிர்க்கலாம்

தவிர்க்கலாம்

அதுபோலதான் இதெல்லாம்.. தேவர் பூஜையில், ஸ்டாலின் அந்த விபூதியை வாங்காமல் தவிர்த்திருக்கலாம்.. அல்லது கீழே கொட்டாமல் பக்கத்தில் இருந்த வேறு யாரிடமாவது அதை தந்திருக்கலாம்.. மற்றபடி வேண்டுமென்றே அவர் செய்திருக்க வாய்ப்பில்லை.. அப்படியென்றால், அந்த இடத்துக்கே அவர் சென்றிருக்க மாட்டாரே? உணர்வுபூர்வமான இதுபோன்ற விஷயத்தில் அவர் கவனமாக இருக்க தவறிவிட்டார் என்பதே உண்மை.

 பிளவுகள்

பிளவுகள்

இதற்கும், உதயநிதி ஆதினத்தை சந்தித்ததற்கும் எப்படி முடிச்சு போட முடியும்? உதயநிதி திருநீறு பூசி கொண்டார்.. பூசினாலும் பிரச்சனை, பூசவில்லையானாலும் பிரச்சனையா? பார்ப்பன கும்ப மரியாதையை மறுத்து, பிற்படுத்தப்பட்ட ஆதீனத்தை சந்தித்த உதயநிதியின் சமூகநீதி பாராட்டத்தக்கதே.. இதுபோன்ற மத, இன ரீதியான விஷயத்தில் யாரையும் சீண்டிவிட்டு, கருத்தியல் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலே போதும்.. தமிழக மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளே தவிர, மத அரசியல் இல்லை என்றனர்.

English summary
Udhyanidhi and MK Stalins Controversy on holy ash issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X