சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிற உச்ச நடிகர்களும் இதை பின்பற்ற வேண்டும்.. சூர்யாவிற்கு வாழ்த்துகள்.. புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நடிகரும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தமிழகம் முழுக்க பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா நேற்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நீட் தேர்வுக்கு பின் இருக்கும் அரசியல் குறித்து சூர்யா வெளிப்படையாக இதில் அறிவித்து இருந்தார்.

நீட் தேர்வு குறித்து எந்த நடிகரும் பெரிய அளவில் பேசாத நிலையில் நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு பின் இருக்கும் அழுத்தம், மறைமுக அரசியல், மாணவர்களின் நலன், தமிழக மருத்துவ எதிர்காலம் என்று பலர் விஷயங்களை நடிகர் சூர்யா தொட்டு இருந்தார்.

கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கு சமம்.. சூர்யாவுக்கு ஆதரவாக 25 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கு சமம்.. சூர்யாவுக்கு ஆதரவாக 25 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்

மனசாட்சி உலுக்கியது

மனசாட்சி உலுக்கியது

ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. இது போன்ற அவலம் எதுவும் இல்லை. ஒரு தேர்வெழுதப் செல்ல மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் நிலைக்கு நாம் சென்று இருக்கிறோம். தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. அதன்பின் இதை கடந்து விடுகிறோம் .

சாணக்கியர் எப்படி

சாணக்கியர் எப்படி

இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள். உயிருக்குப் பயந்து காணொளியில் வழக்குகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய்த் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள், என்று சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆதரவு என்ன

ஆதரவு என்ன

சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பெரிய அளவில் இணையத்தில் ஆதரவு குவிந்து வருகிறது. சூர்யா எப்போதும் தனது கருத்துக்களை உறுதியாக தெரிவித்து வருகிறார். விளைவுகளுக்கு அஞ்சாமல் தனக்கு சரி என்று பட்டதை சூர்யா பேசி வருகிறார் என்று பலரும் பாராட்டி உள்ளனர். அதே சமயம் சூர்யாவின் கருத்துக்கு பாஜகவை சேர்ந்தவர்களும் நீட் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நடிகரும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் நடிகர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
DMK Udhyanidhi Stalin praises Actor Surya Comment on Neet exam.60
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X