சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ம்ஹூம்.. என்ன டிராமா போட்டாலும் நோட்டாவுக்கு கீழேதான்.." மோடி, அமித்ஷாவை தெறிக்க விட்ட உதயநிதி

பிரதமர் மோடி, அமித்ஷாவை விமர்சித்து உதயநிதி ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்ட்டிமென்ட் நாடகமெல்லாம் தமிழகத்தில் எடுபடாது என்றும், என்ன நாடகம் போட்டாலும் நீங்க நோட்டாவுக்கு கீழே தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தாலும் சரி, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறபோதெல்லாம் தமிழில் வணக்கம் சொல்லி விட்டுத்தான் பேசுவார்..

அதிலும் இப்போது கொஞ்ச நாட்களாகவே, திருக்குறள், பாரதியார் பாட்டு, என தமிழ் இலக்கியங்களை குறிப்பிட்டும் பேசி வருகிறார்...

 சந்தேகம்

சந்தேகம்

சமஸ்கிருதத்தை கட்டாய மொழியாக்க விருப்பம் உள்ள நிலையில், அந்த முயற்சிக்கு தமிழகத்தில் பல எதிர்ப்பு குரல்கள் எழுந்து வரும் நிலையில், இவர் ஏன் திடீர்னு தமிழ் மொழி பக்கம் தன் கவனத்தை திருப்புகிறார், அதுவும் தேர்தல் சமயத்தில் ஏன் இப்படி பேசி வருகிறார் என்ற பரவலான சந்தேகங்களும் எழுந்து வரவே செய்கின்றன.

ஆதங்கம்

ஆதங்கம்

இப்படிப்பட்ட சூழலில்தான், மன்கிபாத்தில் நேற்று பேசும்போது, தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.. பிரதமரின் இந்த பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய கருத்தை ட்வீட்களாக பதிவிட்டுள்ளார்..

 எம்பிக்கள்

எம்பிக்கள்

அதில், "சமஸ்கிருதம், இந்தியை திணிப்பது-கேந்திரிய வித்யாலயாவிலும், அஞ்சல்துறை தேர்விலும் தமிழை தவிர்ப்பது- தமிழ் எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதம் எழுதுவது, இந்தி திவாஸ் கொண்டாட அழைப்பது..இப்படி எல்லாம் செய்துவிட்டு, 'எங்களுக்கு தமிழ் வரவில்லை வருத்தப்படுகிறோம்' என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறுகின்றனர். தேர்தலின்போது தமிழ் மீது பாசம் வருவதும், தேர்தலுக்குப்பின் ஒரே நாடு-ஒரே மொழி; இந்தி நல்லதென வகுப்பெடுப்பதும் அவர்களின் வழக்கம். இந்த செண்டிமென்ட் நாடகமெல்லாம் தமிழகத்தில் எடுபடாது. என்ன நாடகம் போட்டாலும் நீங்கள் நோட்டாவுக்கு கீழே தான் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி

உதயநிதி

உதயநிதியின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி ட்விட்டர்வாசிகள் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.. தமிழ் தமிழ் என்று பிரதமர் சொல்கிறாரே, அதுக்கு பேசாமல் தமிழை ஆட்சி மொழியாக்கிவிட்டு போக வேண்டியது

 அறிக்கை உண்டா?

அறிக்கை உண்டா?

"டெல்லியில 37 பேர் இருக்கீங்களே, எல்லாரும் அங்கே தமிழில் பேச வேண்டியதானே? நீங்க மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழை கொண்டு வந்திருக்கலாமே.. அப்பொழுது இது போன்ற ஓரு அறிக்கை உண்டா? காட்ட முடியுமா? உங்கள் பட நிறுவனத்திற்கு "ரெட் ஜெயின்ட்" என்று பெயர். நீங்கள் நடத்துகிற பள்ளிக்கு "சன் சைன்" என்று பெயர். இவைதான் தமிழ் பற்றா?" என்று உதயநிதியிடமே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. இதனால் உதயநிதியின் ட்விட்டரே செம பிஸியாக இருக்கிறது.

English summary
Udhyanidhi Stalin slams PM Modi and Amit Shah
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X