சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாவம் உதித் சூர்யாக்கள்.. வெங்கடேசன்கள்தான் மிக மிக ஆபத்து.. நீட் தேர்வுதான் இத்தனைக்கும் காரணமா

நீட் தேர்வு அழுத்தம்கூட உதித்சூர்யா கைதுக்கு காரணமாக இருக்குமோ என தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வில் முறைகேடு.. உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஒப்புதல்-வீடியோ

    சென்னை: கிரிமினல் வேலைகளைச் செய்து தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று மாணவர் உதித் சூர்யாவின் தந்தை நினைக்க என்ன காரணம்? யார் காரணம்?

    உதித் சூர்யா விவகாரத்தில் அவரை விட அவரது தந்தைதான் மிகப் பெரிய குற்றமிழைத்துள்ளார். காரணம், மகனுக்குப் பிடிக்காத வேலையை இவர்தான் வலிந்து போய் திணித்துள்ளார். அந்தப் பையனையும் மாட்டி விட்டுள்ளார்.

    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததற்காக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த உதித் சூர்யாவை போலீசார் போன வாரம் கைது செய்தனர். நேற்று திருப்பதி மலையடிவாரத்தில் தலைமறைவாக இருந்த உதித்சூர்யா குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்!ஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்!

    டாக்டர்

    டாக்டர்

    இப்படி ஒரு தகிடுதத்தம் வேலையை ஒருக்காலும் நம்மால் ஏற்று கொள்ள முடியாதுதான். உதித் சூர்யாவின் அப்பா வெங்கடேசனும் ஒரு டாக்டர்தான். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என்ற ஆசையால் இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டதாக சொல்கிறார்.

    வெங்கடேசன்

    வெங்கடேசன்

    ஒரு பெற்ற தகப்பனின் ஆசையாக இது எடுத்து கொண்டாலும், முதலில் இந்த வெங்கடேசன் உண்மையிலேயே நியாயமான முறையில்தான் படித்து டாக்டர் ஆனாரா என்ற அடிப்படை கேள்வியே எழ ஆரம்பித்துள்ளது. காரணம், மகனுக்காக இப்படிச் செய்தவர், தனக்காகவும் செய்திருக்க மாட்டாரா என்ற இயல்பான சந்தேகம் வரத்தானே செய்யும்.

    கவுரவம்

    கவுரவம்

    இதை தாண்டி, தங்கள் பிள்ளைகளை டாக்டராக்கணும், என்ஜீனியராக்கணும் என்கிற எல்லைமீறின ஆசையும், உத்வேகமும்தான், இப்படிப்பட்ட ஆள்மாறாட்ட தவறுகளை செய்ய காரணமாகிறது. அதனால்தான் ஒரு பொறுப்புள்ள இடத்தில் கவுரவமான வேலை பார்த்து வந்த வெங்கடேசன் இன்று குற்றவாளியாக நிற்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தன் மகனுக்கு இதை பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்லும்நிலையில், இப்போது, உதித்சூர்யாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது!

    என்ஜினியர்

    என்ஜினியர்

    ஒருகாலத்தில் இப்படித்தான் பிள்ளைகளை என்ஜீனியர் ஆக்குவது என்று வெறி கொண்டு எழுந்தார்கள். ஒவ்வொரு ஊருக்கு ஒதுக்குப்புறமும் 4 என்ஜினியரிங் காலேஜ் வந்துவிடவும், படித்து வெளியேறியவர்கள் எல்லாம் இன்று பெரும்பாலானோர் நிலைகுலைந்து நிற்கிறார்கள். இப்போது, இந்த என்ஜினியர் வெறி அடங்கிவிட்டது. ஆனால் டாக்டர் வெறி ஆரம்பித்துவிட்டது. இதற்கு நீட் தேர்வு ஒரு முக்கிய காரணம் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

    நீட் தேர்வு அழுத்தம்

    நீட் தேர்வு அழுத்தம்

    நீட் தேர்வு முறை வராத வரை இப்படியெல்லாம் முறைகேடு நடந்தது கிடையாது. சீட்டுக்கு ரேட் உயரும்.. இதுதான் அதிகபட்சமாக நடந்தது. ஆனால் நீட் தேர்வு கெடுபிடிகள்.. வெட்கம், மானம், அந்தஸ்துக்களை இழந்து.. உயிர்களை காவு வாங்கும் நிலைக்கு வந்துவிட்டது. நன்றாக படித்து, முன்னுக்கு வரும் பிள்ளைகளால் நீட் தேர்வு பலுவை தாங்கி கொள்ளவே முடியவில்லை.

    பயங்கரம்

    பயங்கரம்

    பணம் இருக்கவே, மகனை வெங்கடேசன் டாக்டர் சீட் வாங்கிவிட்டார். அது இல்லாதோர் நிலைமை? இதுதான் அனிதா முதல் இப்போதுவரை தற்கொலைகளை தந்துவருகிறது. பெற்றவர்கள் தகுதிக்கு மீறி ஆசைப்படுவது ஒரு மோகம், என்றால், நீட் தேர்வு கண்ணுக்கு தெரியாமலேயே மறைந்திருந்து உயிரை கொன்றுவருவது இன்னொரு பயங்கரம்!

    English summary
    Neet exam pressure is also said to be the cause of medical student abuse like Udit Surya incident
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X