• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உகாதி பண்டிகை : அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக மலர தலைவர்கள் வாழ்த்து

|

சென்னை: தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  பேசும் மொழி வேறு…. வாழும் இடம் ஒன்று… ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் யுகாதி தின வாழ்த்துகள்!

  தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி ஆகும். பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.

  மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

  Ugadi festival political leaders wishes Telugu and Kannada

  சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

  உகாதி புத்தாண்டு தினத்தன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. இன்று செவ்வாய்கிழமை உகாதிப் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உகாதி, குடி படாவா, சைத்ர சுக்லாதி, சேதி சந்த், வைசாகி, விசு, புத்தாண்டு, வைஷ்காதி மற்றும் போஹாக் பிஹூ' ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தமிழகத்தில் மே 3ல் நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31க்கு மாற்றம்தமிழகத்தில் மே 3ல் நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31க்கு மாற்றம்

  இந்த பண்டிகைகள், பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கின்றன மற்றும் நாட்டின் கூட்டு கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மக்கள் இதை உகாதி எனவும் மற்றும் கர்நாடக மக்கள் 'யுகாதி' எனவும் அழைக்கின்றனர். மகாராஷ்டிராவில், இது குடி படாவா என கொண்டாடப்படுகிறது மற்றும் தமிழ்நாட்டில் இது புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

  கேரளாவில் நமது மலையாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் விஷூ வாக கொண்டாடும் போது பஞ்சாப்பில் இது வைஷாகி யாக கொண்டாப்படுகிறது. ஒடிசாவில் இது பனா சங்க்ராந்தியாக அழைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில், பொய்லா பாய்சாக் புதிய ஆண்டில் தொடங்குகிறது மற்றும் அசாமில், போஹாக் பிஹூ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால், இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன.

  நமது மதங்களின் புனித நூல்கள், இயற்கை மீதான நமது மரியாதையை காட்டும் சம்பவங்கள் நிறைந்தவை. நம் நாட்டில் அறுவடை காலம் என்பது, இயற்கையின் உயிர்ப்பு மற்றும் மிகுதியை கொண்டாடும் நிகழ்வாகும். நமது நாட்டில் பண்டிகைகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வாக எப்போதும் உள்ளது. ஆனால், தற்போதைய கோவிட் தொற்று சூழலில், இந்த பண்டிகையை கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த பண்டிகைகள் நமது நாட்டில் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் என குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.

  Ugadi festival political leaders wishes Telugu and Kannada

  ஆளுநர் வாழ்த்து

  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , குடி படுவா, உகாதி விழா,சஜிபு நோங்மபன்பா பண்டிகை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு, கன்னடா,மராத்தி, சிந்தி மாநில மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்புடன் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுகள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

  முதல்வர் பழனிச்சாமி

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் உகாதி பண்டிகை வாழ்த்து கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது இதயம் கனிந்த யுகாதி தின நல்வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்வர் பழனிச்சாமி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

  டிடிவி தினகரன் வாழ்த்து

  தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.

  English summary
  Leaders including Vice President Venkaiah Naidu, Governor of Tamil Nadu Banwarilal Purohit and Chief Minister Edappadi Palanisamy congratulated the Telugu and Kannada speaking people on the occasion of Ugadi Thirunal today.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X