• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆபாச" தாக்குதல்.. அசிங்கமான பேச்சுக்கள்.. 2020-ல் உலுக்கி எடுத்து திணறடித்த வனிதா!

|

சென்னை: ஒருவர் பேசுவது சர்ச்சையாகலாம்.. ஆனால் சர்ச்சையாக வேண்டுமென்றே பேசுவது சரியா? அந்த லிஸ்ட்டில் சேர்பவர்தான் வனிதா.. இந்த வருடம் 2020-ல் ட்விட்டரையே உலுக்கிய எடுத்த பங்கு வனிதாவுக்கும் உண்டு!

நடிகை வனிதாவை பொறுத்தவரை, எங்காவது ஒதுங்கியே இருப்பார்.. பிறகு திடீரென சீனில் வருவார்.. அப்படி வந்தால் அன்று முழுவதும் மீடியாக்களுக்கு கண்டென்ட் கிடைத்துவிடும்.

இதைதான் பிக்பாஸ் நிகழ்ச்சியும் தனக்கு சாதகமாக வனிதாவை பயன்படுத்தியது.. வெளியே நாமினேட் செய்யப்பட்ட வனிதாவை மறுபடியும் வீட்டுக்குள் பிக்பாஸ் கூப்பிட்டு கொண்டது.. தன் பலத்தை வனிதாவும் உணர்ந்திருந்தார்.. அதனாலேயே பிக்பாஸ் வீட்டை வம்பிழுத்து கொண்டு, எல்லாரிடமும் கெட்ட பெயர் வாங்கினார்.

பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன்- நடிகை வனிதா தகவல்

 பிக்பாஸ்

பிக்பாஸ்

இப்படி கெட்ட பேர் வாங்குவதால், அதன்மூலம் தனக்கு கிடைக்க போகும் பலனை வனிதா நினைத்து பார்க்கவில்லை.. தன்னை ஒரு கன்டன்ட் புரொவைடர் என்று அவராகவே பெருமையாகவும் சொல்லி கொண்டார்.. எதிர்பார்த்தபடியே பிக்பாஸ் புரோமாக்களில் வனிதாதான் தினமும் டிரெண்டாகி கொண்டிருந்தார்.

 யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

ஒருகட்டத்தில் போதுமான வெற்றியை வனிதா பெற்றுவிட்டார்.. இந்த வெற்றியின் அடிப்படையிலும், தனக்கு கிடைத்த ரசிகர் கூட்டத்தையும் வைத்து கொண்டு சொந்தமாக யூடியூப் சேனலையும் தொடங்கினார்.. அதிலும் வனிதா ஓரளவு வெற்றியையே சம்பாதித்தார்.. பிறகு 4வதாக ஒரு கல்யாணம் செய்தார். அந்த கல்யாணத்தை ஊரே வேடிக்கை பார்த்தது.. இருந்தாலும் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதால், "வனிதா நல்லா இருக்கட்டும்" என்பதே அனைவரின் ஆசையாகவும் வாழ்த்தாகவும் இருந்தது.. இதுவரை ஓகே... இதற்குபிறகுதான் எல்லாமே மாற தொடங்கியது.

 லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

4வதாக கல்யாணம் செய்தவரின் மனைவி இது தொடர்பாக பிரச்சனையை கிளப்பவும், விவாகரத்தே ஆகாமல் எப்படி கல்யாணம் செய்யலாம் என்று அந்த அப்பாவி மனைவிக்கு திரைப்பிரபலங்கள் சிலரும் ஆதரவு கேட்டு முன்வந்தனர்.. அப்படி வந்தவர்தான் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்டோர். ஆனால், இவர்களையும் வனிதா ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பேசியது யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.

 அதிர்ச்சி பேச்சு

அதிர்ச்சி பேச்சு

அதிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான லட்சுமி ராமகிருஷ்ணனை, ஒருமையிலும், கெட்ட வார்த்தையிலும் வனிதா பேசியது உச்சக்கட்ட அராஜகம்.. இதுதான் அன்றைய நாள் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.. வனிதா அன்றைய தினம் ட்விட்டரிலும் ட்ரெண்டானார். இதற்கு பிறகு "தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்க.. எந்த வீட்டுக்கு போனாலும், எல்லா வீட்டுலயும் 2 பொண்டாட்டிங்க இருப்பாங்க" என்று இன்னொரு சர்ச்சை பேச்சை பேசியதால் பாஜகவினர் கொந்தளித்து போய் போலீஸ் ஸ்டேஷனில் வனிதா மீது புகார் தந்தனர்.

 கெட்ட பெயர்

கெட்ட பெயர்

இவ்வளவு கெட்ட பெயரை வாங்கி கொண்ட வனிதாவுக்கும், இறுதியில் எதுவுமே மிச்சமில்லை.. கட்டிய 4வது கணவனையும் பிரிந்தார்.. பிக்பாஸ் மூலம் சம்பாதித்த நல்ல பெயரும் சிதைந்துவிட்டது.. சண்டைக்காரி, கோபக்காரி என்ற பெயரையும் அசால்ட்டாக பெற்றுவிட்டார். அந்த வகையில் இந்த வருடம் முழுவதும் வனிதாவின் சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் நிறைந்தே இருந்தன.. என்னதான் வனிதா மீது குவியல் குவியலாக புகார்கள், குறைகளை சொன்னாலும், ஒரு மென்மையான தாய்மை வனிதாவுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது!

 
 
 
English summary
Unforgettable 2020: Actress Vanitha Vijayakumars News became Trending on Twitter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X