• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"புரோக்கர்" பிரேமா.. நாஞ்சில் முருகேசன்.. பெண்களை நாசம் செய்து.. 2020ஐ அதிர வைத்த 2 காமுகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இருந்து கொண்டே, கட்சியின் பெயரை சொல்லி பெண்களை நாசம் செய்த 2 முக்கிய புள்ளிகளின் அராஜகத்தினை இந்த 2020-ல் மறக்க முடியாது. எனினும், இவர்கள் 2 பேரையுமே தயவுதாட்சண்யம் இல்லாமல் பதவியை பறித்து தூக்கி எறிந்தது அதிமுக தலைமை.. அந்த வகையில் 2 பேர் முக்கியமானவர்கள்.. ஒருவர் பிரேமா.. இன்னொருவர் நாஞ்சில் முருகேசன்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் நிறைய விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

லாட்ஜ்கள் தவிர, தனி வீடுகள் எடுத்தும் இந்த விபச்சாரம் நடப்பதாகவும், இதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்கிறார்கள் என்று அடுத்தடுத்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

 வெளிமாநிலம்

வெளிமாநிலம்

இதுகுறித்து அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டதில், அடிபட்ட பெயர்தான் பிரேமா.. 50 வயதாகிறது.. அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி... உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும்கூட.. இறுதியில் பிரேமாவை கைது செய்தது ஆம்பூர் மகளிர் போலீசார்.. வெளிமாநிலத்தில் இருந்து இளம்பெண்களை வரழைத்த பிரேமா, உமாராத் பகுதியில் மட்டுமல்லாது, சுற்றுவட்டார ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம் போன்ற பகுதிகளுக்கும் இந்த பெண்களை அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்றும் சொல்லப்பட்டது.

 வாடகை

வாடகை

பாலியல் தொழில் செய்யும் சில நபர்களுடன் ஏற்பட்ட பழக்கமும், பணம் சம்பாதிக்கும் வெறியும்தான் பிரேமாவை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்கிறார்கள். இதற்காகவே வீட்டை 2 வருடமாக வாடகைக்கு எடுத்துள்ளார்.. பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க. அந்த பெண்களிடம் கனிவாக பேசியே பிரெயின் வாஷ் செய்வாராம் பிரேமா. பிறகு அந்த பெண்கள் மட்டுமல்லாது, அவர்களின் பெண் குழந்தைகளையும் இந்த தொழிலில் தள்ளியுள்ள அவலமும் நடந்துள்ளது.

 நாஞ்சில் முருகேசன்

நாஞ்சில் முருகேசன்

அதேபோல, அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனும் இதுபோன்ற ஒரு புகாரில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் தந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர்.

சிறுமி

சிறுமி

அப்போதுதான், நாஞ்சில் முருகேசன் தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்தார் அந்த பெண்.
2 வருஷத்துக்கு முன்பு அதாவது 2017-ல், பெற்ற மகளை கொண்டு முருகேசனிடம் கூட்டிக் கொண்டு போனாராம் சிறுமியின் தாய்.. பணத்துக்காக இந்த ஈன காரியத்தை அவர் செய்திருக்கிறார்.. முருகேசனுக்கு 60 வயசாகிறது.. 2 வருடத்துக்கு முன்பு என்றால் சிறுமிக்கு 12 அல்லது 13 வயசுதான் இருந்திருக்கும்.. முருகேசன் தான் மட்டும் சிறுமியை சீரழிக்காமல், தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கினாராம்..

பழக்கம்

பழக்கம்

அதுமட்டுமல்ல, நாஞ்சில் முருகேசனுக்கு அந்த சிறுமியின் அம்மாவுடனே தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த பாலியல் கும்பலிடம் சிறுமி தவித்து சிக்கி கொண்டிருக்கும்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த வழக்கையும் போலீசார் தீவிரமாகவே விசாரித்தனர்.. முக்கிய பிரபலம் என்றெல்லாம் கரிசனமே பார்க்கவில்லை. கைது நடவடிக்கை , வழக்கு விசாரணை என அடுத்தடுத்து தொடர்ந்தது.. நடந்து முடிந்த இந்த சம்பவங்களில், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே இதுபோன்ற தவறுகளை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆனால், இவர்கள் இருவரையுமே கட்சி தலைமை உடனடியாக நீக்கி உத்தரவிட்டது.. பதவியில் இருந்து கொண்டே இதுபோல அட்டூழியங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிமுகவின் இந்த அதிரடி நடவடிக்கை, உள்ளுக்குள் உதறலை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது!

English summary
Unforgettable 2020: Sexual harassment and Former AIADMK Persons arrested case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X