சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இங்க வாடா".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்

பழங்குடியின சிறுவனை அழைத்து தன் செருப்பை கழட்டிவிட சொன்னார் திண்டுக்கல் சீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: சமீப காலமாகவே தமிழக அமைச்சர்களில் ஒருசிலர் சர்ச்சையான செயலில் சிக்கி கொண்ட சம்பவங்கள் நடந்து வருகிறது.. அதில் ஒருவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.. சென்ற வருடம் போலவே இந்த 2020-லிலும் திண்டுக்கல்லார் செய்த ஒரு யதேச்சையான செயல், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஊட்டிக்கு சென்றிருந்தார்.. முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே அமைச்சர் சென்றார்.

அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, திரும்பி வரும் வழியில் அவரை காண்பதற்காக சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்... அப்போது ஒரு கோயிலுக்குள் சாமி கும்பிட செல்ல நேர்ந்தது.. அதனால் அங்கு செல்ல முயன்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது... பக்கிள்ஸ் போட்ட செருப்பினை அமைச்சர் அணிந்திருந்தார்.

திடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சிதிடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சி

 வெள்ளந்தி மனிதர்

வெள்ளந்தி மனிதர்

தானே குனிந்து தன்னுடைய செருப்பை கழட்டாமல், அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு கழற்றிவிடுமாறு சொன்னார். செருப்பை சிறுவன் கழட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.. அன்றைய டிவிகளில் இந்த காட்சிதான் எதிரொலித்து கொண்டே இருந்தது.. உண்மையில் திண்டுக்கல் சீனிவாசன், ரொம்பவே வெள்ளந்தியானவர்.. எதையும் மனசில் வைத்து கொண்டு பேச மாட்டார்.. யாரையும் காயப்படுத்தியும் பேசியதில்லை.

 பேரன் மாதிரி

பேரன் மாதிரி

அந்த சிறுவனை அழைத்து செருப்பை கழட்டிவிட சொன்னதுகூட யதார்த்தமான ஒன்று என்றாலும், அந்த சிறுவன் பழங்குடியினம் என்பதால் விஷயம் பெரிதாகிவிட்டது.. தாம் சாதாரணமாக சொன்னது, இப்படி பூதாகரமாகும் என்று அமைச்சரே எதிர்பார்க்கவில்லை.. நிஜமாகவே அதிர்ந்துபோய்விட்டார்.. "அந்த பையன் எனக்கு பேரன் மாதிரி" என்று அமைச்சர் விளக்கம் சொன்னார்.. ஆனால், அதை யாருமே ஏற்கவில்லை.. பல்வேறு தரப்பில் அமைச்சர் மீது நடவடிக்கை கோரி புகார் தர ஆரம்பித்துவிட்டனர்..

கண்ணீர்

கண்ணீர்

ஒருகட்டத்தில் சம்பந்தப்பட்ட சிறுவனே மசினக்குடி போலீஸ் ஸ்டேஷனில் அமைச்சர் மீது புகார் தந்தான்.. அந்த புகாரில் "அமைச்சர் சொல்கிறாரே என்பதற்காகவும், உயரதிகாரிகள், போலீஸ்காரர்கள் இருப்பதாலும்தான் நான் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டேன். இதை அங்கிருந்தோர் வேடிக்கை பார்த்தனர்.. அங்கு வந்திருந்தவர்கள் எல்லாருமே பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது அமைச்சர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்ச்சை

சர்ச்சை

இதையடுத்து, நிலைமையை சரிசெய்ய, சிறுவனையே நேரில் அழைத்து பேசினார் திண்டுக்கல் சீனிவாசன்.. சிறுவனின் தாயிடமும் தன்னுடைய செயலுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.. இதற்கு பிறகு அமைச்சர் மீது சிறுவன் தந்த புகார் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.. இந்த வருடத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்படுத்திய பரபரப்பில் இது முக்கியமான ஒன்றாகும்!

English summary
Unforgettable 2020: Tribal boy complaint against Minister Dindigul Srinivasan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X