கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வருமா? விரிவான திட்ட அறிக்கை ‛ரிட்டன்’ செய்த மத்திய அரசு! என்ன காரணம்
சென்னை: கோவை, மதுரை மாநகருக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மதுரையில் ரூ11,360 கோடியிலும், கோவையில் 10,740 கோடியிலும் மெட்ரோ சேவை தொடங்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்காத மத்திய அரசு மாறுதல் கோரி திருப்பி அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அதன்படி சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக மதுரை, கோவைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடம் ஆராயப்பட்டது. மதுரையை பொறுத்தவரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு (இதில் 4.65 கிலோமீட்டர் தொலைவு சுரங்கபாதை) மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்படப்பட்டது. மொத்தம் 23 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு என்பது ரூ.11,360 கோடியாகும்.
மறுபுறம் கோவையில் 39 கிலோமீட்டர் தொலைவுக்கு 32 மெட்ரோ நிலையங்களுடன் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டது. அதாவது கோவை அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையும் மெட்ரோ ரயிலுக்கான உயர்மட்ட பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு என்பது 10,740 கோடியாகும்.
இதையடுத்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட இருநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரித்தது. இந்த அறிக்கை தமிழக அரசின் ஒப்புதல் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறுிக்கை என்பது 936 பக்கங்களை கொண்டதாகவும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை என்பது 655 பக்கங்கள் கொண்டதாகவும் இருந்தது.
இந்த திட்ட அறிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தால் படிப்படியாக மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி உள்ளது. அதாவது இரு நகரங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில் சில மாறுதல்களை செய்து அனுப்பும்படி மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications