சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாங்க.. ஆனால் பழக மட்டும் செய்யலாம்.. அமித்ஷாவை அல்லாட விடும் ரஜினி.. தர்மசங்கடத்தில் பாஜக!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் வருகை தரும் அமித்ஷா நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பாரா? இல்லையா? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழிபிதுங்குகிறது பாஜக.

Recommended Video

    சென்னை: அமித்ஷாவுக்கு ஆட்டம் காட்டும் ரஜினி.. டெல்லி தலைமையிடம் திணறும் தமிழக பாஜக..!

    உள்துறை அமைச்சர் வரும் 21-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார். சென்னையில் பல்வேறு சந்திப்புகள், ஆலோசனைகள், சட்டசபை தேர்தல் வியூகம் என படுபிசியாக இருக்கப் போகிறார் அமித்ஷா.

    வருகிறார் 'சாணக்கியர்' அமித்ஷா.. எந்த திராவிட கட்சியின் வாக்கு வங்கிக்கு வாய்க்கரிசி போடுவாரோ? வருகிறார் 'சாணக்கியர்' அமித்ஷா.. எந்த திராவிட கட்சியின் வாக்கு வங்கிக்கு வாய்க்கரிசி போடுவாரோ?

    சென்னை வரும் அமித்ஷா

    சென்னை வரும் அமித்ஷா

    அமித்ஷா வருகையின் போது அவர் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமாக ஒரு கூட்டம் தயார் செய்யப்பட்டும் கொண்டிருக்கிறதாம். இவற்றை எல்லாம் விட நடிகர் ரஜினிகாந்த், மு.க. அழகிரி ஆகியோரை அமித்ஷா சந்திக்கலாம் என்கிற செய்திகள்தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

    இதுதான் டெல்லி நிலைப்பாடு

    இதுதான் டெல்லி நிலைப்பாடு

    ஆனால் பாஜக தரப்போ எந்த ஒரு உறுதியான பதிலும் தரமுடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து விசாரித்த போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தால் அவரை சந்தித்து பேசலாம். அவரை வைத்து நமது அரசியலை கையில் எடுக்கலாம். ஆனால் எதுவுமே அவர் சொல்லாமல் இருக்கிறாரே என தயங்குகிறதாம் டெல்லி.

    நழுவும் ரஜினிகாந்த்

    நழுவும் ரஜினிகாந்த்

    இது பற்றி டெல்லிக்கும் போயஸ் கார்டனுக்கும் இடையே தூதராக இருப்பவர்கள் ரஜினிகாந்துடன் பேசிப் பார்த்தும் இருக்கின்றனர். ஆனால் ரஜினி தரப்பு, வாங்க பழகலாம் என சினிமா டயலாக் ரேஞ்சுக்கு பதில் தருகிறதே தவிர, அந்த அரசியலுக்கு வருவது? என்றாலே அப்படி ஒரு பம்மு பம்முகிறதாம். இந்த தகவல் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம்.

    அமித்ஷா-ரஜினி சந்திப்பு நடக்குமா?

    அமித்ஷா-ரஜினி சந்திப்பு நடக்குமா?

    இதனால்தான் அமித்ஷா-ரஜினிகாந்த் சந்திப்பு நடக்குமா? நடக்காதா? என எதுவும் தெரியாமல் பாஜக நிர்வாகிகள் தவிக்கிறார்களாம். அதேநேரத்தில் தம்மை பற்றி வெளியான அத்தனை செய்திகளையும் ஒரே போடாக அழகிரி மறுத்திருக்கிறார். அதனால் அழகிரி வெளிப்படையாக அமித்ஷாவை சந்திப்பதும் சந்தேகம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

    English summary
    Tamilnadu BJP leaders confuse over the Union Home Minister Amit Shah and Actor Rajinikanth meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X