சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்ரோன்கள் மூலம் காய்கறி டெலிவரி! அமைச்சர் அனுராக் தாக்கூரின் ஐடியா! மாஸ் காட்டிய மாணவர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் எனவும், வேளாண்துறையில் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ச்சிகளை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய தகவல் ஒளிபரப்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

சென்னை தாளம்புரில் உள்ள தனியார் கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு மற்றும் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்பு ,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தும் "கருடா கிசான்" எனும் ட்ரோன்களின் நிகழ்வை கண்டுகளித்தார்.

ட்ரோன் ஊடுருவலுக்கு ஃபுல் ஸ்டாப்.. இந்திய ராணுவம் கையாளும் புதிய யுக்தி! களமிறக்கப்படும் ட்ரோன் ஊடுருவலுக்கு ஃபுல் ஸ்டாப்.. இந்திய ராணுவம் கையாளும் புதிய யுக்தி! களமிறக்கப்படும்

அனுராக் சிங் தாக்கூர்

அனுராக் சிங் தாக்கூர்

நிகழ்ச்சி மேடையில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்குவதற்கு ஏற்பாட்டாளர் அழைக்கும் போது காலணியை கழற்றி விட்டு விளக்கு ஏற்றினார். இதனை கண்டு அங்கிருந்த மாணவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து மேடையில் பேசிய அனுராக் , நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது,உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உள்ளது.

ட்ரோன்

ட்ரோன்

கொரோனா காலகட்டத்தில் ட்ரோன் எவ்வளவு உதவியாக இருந்தது என நாம் பார்த்தோம், ட்ரோன்கள் தற்போது வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மிக பெரிய அளவில் அவை உதவியாக உள்ளதால் பிரதமர் அரசு திட்டங்களை அவற்றை சேர்த்துள்ளார்.2014ஆம் ஆண்டு MAKE IN INDIA திட்டம் குறித்து பிரதமர் பேசும்போது இது சாத்தியமா என கேள்வி எழுப்பினார்கள்.

மிகவும் உதவி

மிகவும் உதவி

இன்று 2022ஆம் ஆண்டு இந்தியாவின் இளைஞர்கள் அவற்றை சாத்தியபடுத்திவருகின்றனர். வேளாண்துறையில் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ச்சிகளை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, ஹிமாச்சல்பிரதேசம் போன்ற மலை உள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்துவது மிகவும் உதவியாக உள்ளது.

காய்கறி டெலிவரி

காய்கறி டெலிவரி

இருப்பினும் ட்ரோன் மூலம் அதிவேகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியே கொண்டு செல்ல கண்டுபிடிப்புகள் வர வேண்டும். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக அதிகரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
Union Information Broadcasting Youth Welfare and Sports Minister Anurag Thakur has said that India will become the center of the world in drone technology and the government is taking steps to carry out scientific developments in the agriculture sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X