சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவை சீரழிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக நிற்கிறார் தீபிகா படுகோன்: ஸ்மிருதி இரானி ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    JNU போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன் - வீடியோ

    சென்னை: இந்தியாவை சீரழிக்க நினைக்கும் சக்திகளுக்கு ஆதரவாக நடிகை தீபிகா படுகோன் இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார்.

    டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடியதால் தாக்குதலுக்குள்ளான மாணவர்களை நேரில் சந்தித்தார் தீபிகா படுகோன். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன்னர்.

    Union Minister Smriti Irani slams Deepika Padukone for visit to JNU

    தீபிகா படுகோன் நடித்த சபாக் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ சபாக் திரைப்படத்தை தங்களது கட்சியினர் பார்க்க வேண்டும்; தீபிகா படுகோனுக்கு ஆதரவு தர வேண்டும் என்கின்றனர்.

    இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:

    2011-ம் ஆண்டு முதலே காங்கிரஸை ஆதரிப்பவர் தீபிகா படுகோன். ராகுல் காந்தியை பிரதமராக்க ஆதரவு தெரிவித்து பேட்டிகளையும் தந்தவர் தீபிகாபடுகோன்.

    நிஜமாவே கட்சி ஆரம்பிக்க போறாரா ரஜினி.. நேற்று தர்பார் ரிலீஸ்.. இன்று நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை! நிஜமாவே கட்சி ஆரம்பிக்க போறாரா ரஜினி.. நேற்று தர்பார் ரிலீஸ்.. இன்று நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை!

    இவற்றையெல்லாம் படித்தாலே அவர் எந்த மாதிரியான அரசியல் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடியும். சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஒவ்வொரு முறையும் கொல்லப்படும்போது அதை கொண்டாடுகிறவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் தீபிகாபடுகோன்.

    பெண்களின் உரிமை ஒடுக்கி அவர்களை தாக்குகிறவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் அவரது உரிமை எனில் அதை நாம் மறுக்க முடியாது. இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுடன் தீபிகா இணைந்து நிற்கிறார்.

    இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

    English summary
    Union Minister Smriti Irani said that Deepika Padukone stodd with who wanted the destruction of India on her JNU Visit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X