சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஒன்றியம்".. நான் சொன்னது தப்பு.. மன்னிச்சிடுங்க.. திடீர்ன்னு இறங்கி வந்த குஷ்பு.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: ஒன்றியம் என்ற வார்த்தை பிரயோகம் குறித்து விவாதம் நடந்து வரும் நிலையில் பாஜக உறுப்பினர் குஷ்பு டிவிட்டரில் திடீரென தன்னுடைய கருத்து ஒன்றுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த உபயோகம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், ஒன்றிய அரசு என்று சொல்வதை சிலர் குற்றம் போல பார்க்கிறார்கள். அது குற்றம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தில் இப்படித்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

 இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - 2,91,28,267 பேர் குணமடைந்தனர் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - 2,91,28,267 பேர் குணமடைந்தனர்

பயன்படுத்துவோம்

பயன்படுத்துவோம்

மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாச்சி தத்துவம் அடங்கி உள்ளது. மத்திய அரசு இனி ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம். இந்த வார்த்தையை மட்டுமே இனி பேட்டிகளில், அறிக்கைகளில் பயன்படுத்துவோம். இனி எப்போதுமே ஒன்றியம் என்றுதான் குறிப்பிடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

குஷ்பு

குஷ்பு

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பேச்சை ஷேர் செய்து பாஜக உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பல்வேறு டிவிட்களை செய்து இருந்த குஷ்பு, இந்தியா என்பது மாநிலங்களால் உருவாக்கப்பட்டது இல்லை. முதல்வர் ஸ்டாலின் வரலாற்றை சரியாக படிக்க வேண்டும். மாநிலங்கள்தான் இந்தியாவால் உருவாக்கப்பட்டது.

தவறு

இதற்கு முன் ஒன்றியம் என்ற வார்த்தையை திமுக பயன்படுத்தியது இல்லை. இப்போது ஆட்சிக்கு வந்ததும் ஒன்றியம் என்று கூறுகிறார்கள் என்று குஷ்பு விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில் மாநிலங்கள் எல்லாம் இந்தியா மூலம் உருவானது என்ற குஷ்புவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் விமர்சனம் வைத்து இருந்தனர்.

மீம்

மீம்

இதை பற்றி நிறைய மீம்களையும் வெளியிட்டு இருந்தனர். அது எப்படி இந்தியா மூலம் மாநிலங்கள் உருவாக்கப்படும். மாவட்டங்கள் இணைந்தது மாநிலம், மாநிலங்கள் இணைந்ததுதான் இந்தியா. ஆனால் குஷ்பு இதற்கு அப்படியே எதிராக பேசுகிறார். குஷ்பு பேசுவது தவறு என்று நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் விமர்சனம் வைத்து இருந்தனர்.

மன்னிப்பு

இந்த நிலையில் இது தொடர்பாக செய்த டிவிட்டிற்கு குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், தனது தவறை ஒப்புக்கொள்ளாதவர்களை விட தவறுக்கு மன்னிப்பு கேட்பவர்கள் உயர்ந்தவர்கள். என்னுடைய டிவிட்டிற்கு மன்னிப்பு கேட்கிறோம். நான் சொன்னது தவறு. தவறான விஷயத்தை போஸ்ட் செய்துவிட்டேன். விவாதத்தின் போது அவ்வப்போது நாம் தவறு செய்வோம், பல தலைவர்கள் இதற்கு முன் இப்படி தவறு செய்துள்ளனர், நான் என்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்கிறேன், என்று குஷ்பு வெளிப்படையாக டிவிட் செய்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

English summary
Union vs Center: BJP Khushbu Sundar openly apologies for her previous tweet on Ondriyam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X