சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் உணவகங்களை திறக்க அரசு அனுமதி... பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று (திங்கள் கிழமை) முதல் உணவகங்கள், உணவு விடுதிகள் திறக்க தமிழகு அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்துள்ள அரசு , உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய விதிகள்.. என்னென்ன கட்டுபாடுகள்?

    தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கியமானவை, பேருந்துகள் இயக்கம், மால்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களை திறக்க அனுமதி, உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளை திறக்க அனுமதித்துள்ளது.

    unlock 1: Government permission to open restaurants from tomorrow , this guidelines to follow

    அத்துடன் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்துள்ளது. எனினும் உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பதை அரசு அறிவித்துள்ளது. கீழ் கண்ட நிபந்தனைகளை பின்பற்றித்தான் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் இயங்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

    எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் நாளை முதல் கோயில்களை திறக்க தயாராகும் மாநிலங்கள்எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் நாளை முதல் கோயில்களை திறக்க தயாராகும் மாநிலங்கள்

    • உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்
    • உணவகங்கள், உணவு விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்தல் வேண்டும்.
    • உணவகங்களில் நுழைவதற்கு முன் வாடிக்கையாளர்கள் கைகழுவ சோப்பு அல்லது சானிடைசர் வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.
    • உணவகங்களில் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
    • உணவகங்களில் உணவருந்தும் மேஜைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
    • உணவகங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை பயன்படுத்தவே கூடாது.
    • உணவகங்களில் ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
    • நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
    • உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
    • உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் நாற்காலி மற்றும் டேபிளை கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
    • உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது.
    • பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
    • உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
    • உணவகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப்பொருட்களை வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
    • அரசால் வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    • அரிசி, பருப்பு, காய்கறிகள், போன்றவை சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்".

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamil nadu Government permission to open restaurants from tomorrow , this guidelines to follow all hotels and restaurants
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X