சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்லாக் 1.0.. தமிழகத்தில் எங்கெல்லாம் தளர்வுகள் வரும்.. சென்னையில் என்ன நிலவரம்.. முழு விபரம்!

Google Oneindia Tamil News

சென்னை: லாக்டவுன் 5.0 காரணமாக தமிழகத்தில் என்ன மாதிரியான தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்க வாய்ப்புள்ளது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுக்க லாக்டவுன் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்பட உள்ளது. லாக்டவுன் 5.0 விற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்போதும் போல ஊரடங்கு தொடரும்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் மட்டும் தளர்வுகள் கொண்டு வரப்பட உள்ளது.

சர்வதேச விமான சேவை.. விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! சர்வதேச விமான சேவை.. விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தளர்வு எப்படி

தளர்வு எப்படி

கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் வரும் ஜூன் 8ம் தேதியில் இருந்து மூன்று கட்டமாக கொண்டு வரப்படும். அதன்படி கட்டம் 1 ஜூன் 8ம் தேதி அமலுக்கு வரும். அதன்பின் கட்டம் 2 ஜூலை மாதம் அமலுக்கு வரும். பின் மூன்றாவது கட்ட லாக்டவுன் தளர்வு அதன்பின் அமலுக்கு வரும். இதில் மாநில அரசுகள் தேவையான முடிவுகள், மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு நிலை என்ன

தமிழ்நாடு நிலை என்ன

லாக்டவுன் 5.0 காரணமாக தமிழகத்தில் என்ன மாதிரியான தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்க வாய்ப்புள்ளது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் மட்டுமே ஊரடங்கு இருக்கும் என்கிறார்கள். மற்ற இடங்களில் தளர்வுகள் கொண்டு வரப்படும் என்கிறார்கள்.

எங்கு கட்டுப்பாடு

எங்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் அதிகமாக கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இதனால் சென்னையை தவிர மற்ற இடங்களில் தமிழகத்தில் பெரிய அளவில் தளர்வுகள் வரும் என்கிறார்கள். முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் தமிழகத்தில் அதிகமாக தளர்வுகள் வரும் என்கிறார்கள். மேலும் கேஸ்கள் குறைவாக இருக்கும் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தளர்வுகள் வரும் என்கிறார்கள்.

தொடங்க வாய்ப்புள்ளது

தொடங்க வாய்ப்புள்ளது

இதனால் தமிழகத்தில் வரும் நாட்களில் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் பின் வரும் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.

கட்டம் 1 - ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க வாய்ப்புள்ளது.

கட்டம் 2 - ஜூலை மாதத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

கட்டம் 3- ஜூலைக்கு பிறகு சர்வதேச விமான பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகும். மெட்ரோ ரயில் இயக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். சினிமா தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள், கூட்டங்கள் நடக்கும் இடங்கள், பார்கள், ஆடிடோரியங்கள், விளையாட்டு போட்டிகள் இதில் இயக்கப்படும்.

சென்னை நிலை

சென்னை நிலை

சென்னையில் கண்டெயின்மெண்ட் சோன் என்று அழைக்கப்படும் கட்டுப்பாட்டு பகுதிகள் 380 இருக்கிறது. ஒரு தெருவில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதி என்று அழைக்கப்படும். ஒரே தெருவில் பலருக்கு பரவினால் இப்படி அறிவிக்கப்படும். அந்த தெரு மொத்தமும் சீல் வைக்கப்படும். சென்னையில் இப்படி 380 பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வாய்ப்பு இல்லை

சென்னை வாய்ப்பு இல்லை

இதனால் சென்னையில் பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். சென்னையில் அதிகமாக கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது . இதனால் அங்கு கண்டிப்பாக கோவில்கள், மால்கள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை. ஜூன் மாதம் இறுதி வரை கண்டிப்பாக சென்னையில் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

மாநில போக்குவரத்து

மாநில போக்குவரத்து

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, ஆனால் இதில் மாநில அரசுகள் சொந்தமாக முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசு விரைவில் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

English summary
Unlock 1: What are the ease down will come to Tamilnadu and Chennai?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X