சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேவையில்லாத செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு பிறகு வரலாம்.. பொடி வைத்து பேசிய செல்லூர் ராஜூ!

Google Oneindia Tamil News

சென்னை: ஆற்றின் இரு கரைகள் போல அ.தி.மு.க.விற்கு எடப்பாடியும்,ஒ.பி.எஸ்சும் இரு தலைவர்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். தேவையில்லாத செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு பிறகு வரலாம் என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.

Recommended Video

    தேவையில்லாத செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு பிறகு வரலாம்.. செல்லூர் ராஜூ - வீடியோ

    3 வருடங்களுக்கு முன்னர் ஸ்டாலின் குடும்பத்திலிருந்து யாரும் தி.மு.க.வில் பொறுப்பிற்கு வர மாட்டார்கள் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் தற்போது ஸ்டாலினின் பேரன் உதயநிதியின் மகன் படத்தையே தி.மு.க.வின் போஸ்டரில் போட்டு விட்டார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்,

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

    மதுரை அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் பங்கேற்றனர்.

    நீட் தேர்வு எப்படி இருந்தது? உயிர் கொடுத்த உயிரியல்.. இன்னல் தந்த இயற்பியல்.. மாணவர்கள் பேட்டிநீட் தேர்வு எப்படி இருந்தது? உயிர் கொடுத்த உயிரியல்.. இன்னல் தந்த இயற்பியல்.. மாணவர்கள் பேட்டி

    கலைஞர் வனவாசம்

    கலைஞர் வனவாசம்

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.ஜி.ஆர் திரைப்படம் 100 நாள் ஒடுவதற்கு கியாரண்டி உண்டு ஆனால் எம்.ஜி.ஆர் கட்சிக்கு கியாரண்டி இல்லை என அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர் ஆரம்பிக்கும் போது கூறியவர் கலைஞர். ஆனால் அவரையே 13 வருடம் ஆட்சிக்கு வர விடாமல் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர்.

    உதயநிதியின் மகன் போஸ்டர்

    உதயநிதியின் மகன் போஸ்டர்

    3 வருடங்களுக்கு முன்னர் எனது குடும்பத்திலிருந்து யாரும் தி.மு.க.வில் பொறுப்பிற்கு வர மாட்டார்கள் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார் ஆனால் தற்போது ஸ்டாலினின் பேரன் உதயநிதியின் மகன் படத்தையே தி.மு.க.வினர் போஸ்டரில் போட்டு விட்டார்கள்.

    ஒபிஎஸ் ஈபிஎஸ்

    ஒபிஎஸ் ஈபிஎஸ்

    அ.தி.மு.க.வில் எந்த பிரச்சனையும் இல்லை. இவர் இதை பேசினார், அவர் அதை பேசினார் என தேவையில்லாத செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு பிறரு வரும் அந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் ( சில நாட்கள் கழித்து சசிகலா சிறையிலிருந்து வரும் போது குழப்பம் ஏற்படலாம் என சூசகமாக சொல்வது போல் இருந்தது.) ஆற்றின் இரு கரைகள் போல அ.தி.மு.க.விற்கு இரு தலைவர்களாக எடப்பாடியும்,ஒ.பி.எஸ்சும் உள்ளார்கள்.

    திமுக பித்தலாட்ட அரசியல்

    திமுக பித்தலாட்ட அரசியல்

    நீட் மோசமானது என்பதை ஜெயலலிதா உணர்ந்து தான் அன்றே நீட்டை எதிர்த்தார். கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசுக்கு மாற்றினால் பாதிப்பு ஏற்படும் என நீட்டை எதிர்த்த ஒரே தலைவர் ஜெயலலிதா தான். திமுக அன்றே நினைத்திருந்தால் கல்வியை நிலப்பட்டியயில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியிருக்கலாம். சூனால் மாற்றாமல் இருந்தவர்கள் திமுகவினர். ற்போது நீட்டால் தற்கொலை செய்த கொண்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறார் உதயநிதி. பித்தலாட்ட அரசியல் திமுகவினர் செய்கின்றனர் நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். காவிரி, நீட் என தூரோகம் செய்துவிட்டு ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது" இவ்வாறு கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவிற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் ஒரு நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    English summary
    Minister Sellur Raju said that Unnecessary news may come after a few more days in aiadmk, so do not belive this type of rumers. ops and eps On both banks of the river ( aiadmk).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X