சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2019 யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு... முடிவுகள் இணையத்தில் வெளியீடு!!

Google Oneindia Tamil News

சென்னை: 2019 செப்டம்பரில் நடந்த யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 829 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட மத்திய அரசுப் பணியிடங்களுக்கான யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு இதற்கான தேர்வுகள் நடந்தது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வுகளும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடந்தது.

UPSC 2019 civil service exam final results out in the website

நேர்காணல் நடந்து கொண்டு இருக்கும்போதே பாதியில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. கொரோனா காரணமாக நேர்காணல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாத இறுதியில் நேர்காணல் நடத்தப்பட்டது. சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் இன்று https://www.upsc.gov.in/ என்ற இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

 தமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார் தமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்

2019ஆம் ஆண்டில் காலியாக இருந்த 829 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்திய நிர்வாகத்துறைகளான Indian Foreign Service, Indian Police Service, Central Services, Group 'A' and Group 'B' ஆகியவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. 829 பணியிடங்களில், ஜெனரல் கோட்டாவில் 304, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் 78, பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 251, எஸ்சி பிரிவினருக்கு 129, எஸ்டி பிரிவினருக்கு 67 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக மாணவர்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தில் தமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பிடித்துள்ளார். தேசிய அளவில் 7ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

English summary
UPSC 2019 civil service exam final results out in the website
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X