சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவில் சர்வீஸ் தேர்வு தொடங்கியது.. தமிழகத்தில் 10 மாவட்ட மையங்கள் ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் 10 மாவட்ட மையங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுளளன.

நாடு முழுவதும் 72 நகரங்களில் 2,569 மையங்களில் நடைபெற்று வரும் தேர்வை 10.58 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்ட மையங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதுகிறார்கள்.

UPSC exams began today in 72 centres

குறிப்பாக சென்னையில் 62 தேர்வு மையங்களில் 22 ஆயிரம் பேர் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வை எழுதுகிறார்கள். அது போல் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 8 தேர்வு மையங்களில் 2,913 பேர் யுபிஎஸ்சி தேர்வை எழுதுகிறார்கள்.

நிதிஷ்குமார் பிடிவாதம்... முறுக்கி கொண்டு நிற்கும் லோக் ஜனசக்தி.. பீகாரில் என்ன நடக்கிறது..? நிதிஷ்குமார் பிடிவாதம்... முறுக்கி கொண்டு நிற்கும் லோக் ஜனசக்தி.. பீகாரில் என்ன நடக்கிறது..?

இன்று காலை 9.30 மணிக்கு முதல் கட்ட தேர்வு தொடங்கியது. பின்னர் மதியம் 2.30 மணிக்கு இரண்டாம் கட்டத் தேர்வும் தொடங்கப்படவுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

UPSC exams began today in 72 centres

மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் ஹால்டிக்கெட், அடையாள அட்டை சரிபார்ப்புக்கு பின்னர் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பார்வையற்றவர்களுக்கு உதவியாளர்களை ஏற்பாடு செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

English summary
UPSC exams began today in 72 centres. Tamilnadu has got 10 centres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X